'உங்க பான் கார்டை புதுப்பிக்க'.. இந்த மெசேஜ்களை மட்டும் திறக்காதீங்க.. எச்சரிக்கை தகவல்
சென்னை: உங்களுடைய பான் கார்டை புதுப்பிக்க வேண்டுமா என்று வரும் எந்தவொரு தகவல்களையும் திறக்க வேண்டாம் என்றும், அது மோசடி அழைப்புகளாக இருக்கலாம் என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக டிஜிட்டல் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பார்ட் டைம் ஜாப், குறைந்த முதலீட்டில் அதிக வருமானம், இரட்டிப்பு லாபம், டிரேடிங் தொடர்பான தகவல்கள், வங்கியில் இருந்து அனுப்புவது போன்ற மெசேஜ் அனுப்புவது, பான் கார்ட், வங்கிக் கணக்கு எண், ஏடிஎம் கார்டு போன்றவை தொடர்பாக பல்வேறு மோசடி தகவல்கள் அனுப்பப்படுகின்றன.

வங்கியில் இருந்து அனுப்பப்படுகிறதோ என்று நினைக்கும் சிலர் அந்த தகவல்களை திறப்பதால் தங்களுடைய வங்கிக் கணக்கில் இருக்கும் அத்தனை பணத்தையும் இழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், வங்கியில் இருந்து எந்தவொரு தகவல்களும் கேட்கப்படுவதில்லை என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், நூதன மோசடி சம்பவங்களில் பொதுமக்கள் சிக்கி வருகின்றனர். இந்நிலையில், சமீபகாலமாக உங்களுடைய பான் கார்டை புதுப்பிக்க வேண்டுமா என்று கேட்டு தகவல்கள் அனுப்பப்பட்டு மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தியா போஸ்ட் பேமேன்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து இந்த மோசடிகள் அதிக அளவில் நடக்கின்றன. இதனால், பான் அட்டையைப் புதுப்பிக்க வேண்டுமா என்று வரும் தகவல்களை திறக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உங்களுடைய பான் கார்டை புதுப்பிக்க வேண்டும். இல்லையெனில் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல்களாக அனுப்பப்படுகிறது. அந்த தகவலில் வரும் லிங்கை கிளிக் செய்வதன் மூலம் அதில் வாடிக்கையாளரின் தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்படுகிறது. இதுபோன்ற மெசேஜ்கள் வந்தால் அதனை திறக்காமல் இருப்பதே நல்லது.
இந்நிலையில், இதுபோன்ற எந்தவொரு மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல்களும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுவதில்லை என்று வங்கி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிஐபி உண்மை அறியும் பக்கத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவில், உங்களுடைய பான் கார்டை புதுப்பிக்காவிட்டால் 24 மணி நேரத்தில் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று வரும் தகவல்கள் உண்மையானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியின் பெயரில் இந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதால் வாடிக்கையாளர்கள் அந்த லிங்கில் கேட்கப்படும் தகவல்களை சந்தேம் இல்லாமல் கொடுத்துவிடும் அபாயம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற இணையதளப் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து நீதிமன்ற ஆணை வந்துள்ளதாக வரும் மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம். நீதிமன்றங்கள் அதுபோன்ற ஆணைகளைப் பிறப்பிக்கவில்லை என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications