தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு முழு லாக்டவுன்.. நாளை காலை 6 மணி முதல் இரவு 9 வரை கடைகள் திறப்பு
ஒரு வாரத்துக்கு தீவிர லாக்டவுன் அமலாகிறது
சென்னை: முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க அனைத்து சட்டமன்ற கட்சிகளின் எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்...அந்த வகையில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வந்த நிலையில், தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறையாமல் உள்ள நிலையில், லாக்டவுன் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்த சந்தேகம் எழுந்தபடியே இருந்தது..
மருத்துவ நிபுணர் குழுவும், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர்.. லாக்டவுன் போட்டதால்தான், தொற்று இந்த 10 நாளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறையும் தெரிவித்து வந்தது.

தலைமை
இந்நிலையில், இன்று முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க அனைத்து சட்டமன்ற கட்சிகளின் எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்தனர்... தற்போது அமலில் இருக்கும் சில தளர்வுகள் கூட, இந்த முறை வழங்கப்படக்கூடாது எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தீர்மானம்
இதையடுத்து, ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க அனைத்து சட்டமன்ற கட்சி குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, இன்று மாலைக்குள் முதல்வர் லாக்டவுன் நீடிப்பு குறித்த தகவலை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

முதல்வர்
இந்நிலையில்,தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமென சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எனவே, நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

விநியோகம்
பேருந்துகள் ஒரு நாள் மட்டும் அனுமதிக்கப்படும்... வெளியூர் செல்லும் பயணிகள் நலன் கருதி இன்றும் நாளையும் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒருவாரம் மிகத்தீவிர ஊரடங்கில் மருந்து கடைகள் உள்ளிட்ட மிக மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பால், குடிநீர், செய்தித்தாள் விநியோகம் மட்டும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருந்தகங்களும் அனுமதிக்கப்படும்.
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications