கிளைமேக்ஸ்.. கிளாம்பாக்கத்தை விடுங்க.. தென் மாவட்டங்களுக்கு போறவங்களுக்கு உருவான "புது அதிசயம்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தினமும் பல லட்சம் பயணிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு இடையே புதிய பேருந்து நிலையம் தொடர்பாக.. முக்கியமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

செங்கல்பட்டில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் பணிகள் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை விரைவாக திறப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

kilambakkam bus

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ரூ.150.05 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதில் செங்கல்பட்டில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 15.11.2023 தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 150 கோடியே 5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பேருந்து நிலையம், மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் மற்றும் இரத்த சுத்திகரிப்பு மையம், உள்விளையாட்டு அரங்கம், பூங்கா, பேருந்துநிலையம் மற்றும் காசிமேடு கடற்கரை பகுதியை மேம்படுத்தும் பணி ஆகிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

சென்னைப் பெருநகரப் பகுதியின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்கு விரிவான திட்டமிடல் தேவை என்பதை உணர்ந்து 1972-ல் மெட்ராஸ் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் என்ற பெயரில் தற்காலிக அமைப்பாக இருந்து, பின்னர் 1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம், 1971-ன் கீழ் சட்டப்பூர்வ குழுமமாக மாற்றப்பட்டது. சென்னைப் பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்கால தேவைகளைக் கருதி பெருகிவரும் மக்கள் தொகைகேற்ப கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், அரசின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் பெருநகரத் திட்டமிடல் தொடர்பான கொள்கை முடிவுகளை செயல்படுத்துதல், நிலவகைப்பாடுகளில் உபயோக மாற்றங்களை முழுமைத் திட்டம் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், வெண்பாக்கத்தில் 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து நிலையம், அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் 13.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணி, கொண்டித்தோப்பில் 11.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் மற்றும் இரத்த சுத்திகரிப்பு மையம், கோயம்பேடு சாலை சந்திப்பில் 10.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள இயற்கை வனப்புடன் புதிய பூங்கா, மயிலாப்பூர், முண்டகக் கண்ணியம்மன் கோயில் அருகில் பெருநகர சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் 8.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய உள்விளையாட்டு அரங்கம் மற்றும் காசிமேடு கடற்கரை பகுதியில் 8.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடற்கரை பகுதியை மேம்படுத்தும் பணி; என மொத்தம் 150 கோடியே 5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு. பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் திரு. சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு. அன்சூல் மிஸ்ரா, இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு பேருந்து நிலையம் : சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் செங்கல்பட்டு பேருந்து நிலையம் கட்டும் பணிகளும் தொடங்க உள்ளன. செங்கல்பட்டில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் பணிகள் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் இன்னொரு பக்கம் செங்கல்பட்டு பேருந்து நிலையம் கட்டும் பணிகளும் தொடங்க உள்ளன. ரூ.40 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் இங்கே அமைக்கப்பட உள்ளது.

சென்னைக்குட்பட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் பலர் இதனால் செங்கல்பட்டில் வசிக்க விரும்பி வருகிறார்கள். இதனால் அங்கே மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான் அங்கே பேருந்து நிலையத்தை புதிதாக அமைக்க முடிவு செய்துள்ளனர்.

செங்கல்பட்டில் தற்போதுள்ள பேருந்து நிலையத்தில் நெரிசலைக் குறைக்கும் வகையில், 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வெண்பாக்கம் ஊராட்சி அருகே 14 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய பேருந்து நிலையம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+