அலறி.. பதறி ஓடிய மக்கள்.. சென்னை சென்ட்ரலில் தொங்கிய பெண்ணின் உடல்.. அதிகாலையில் கேட்ட அலறல்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சென்ட்ரல் அதிகாரப்பூர்வமாக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என்று அழைக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல், தென்னிந்தியாவின் மிகவும் பரபரப்பான ரயில் நிலையம் மற்றும் நாட்டின் மிக முக்கியமான ரயில் மையங்களில் ஒன்றாகும்.

இது சென்னை நகரின் முக்கிய ரயில் முனையமாகும். இது மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் ரயில் நிலையம், சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையம், சென்னை பார்க் ரயில் நிலையம் மற்றும் சென்னை பார்க் டவுன் ரயில் நிலையம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1.8 கிமீ (1.1 மைல்) தொலைவில் உள்ளது. இந்த முனையமானது கொல்கத்தா, மும்பை மற்றும் டெல்லி மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் உட்பட வட இந்தியாவுடன் நகரத்தை இணைக்கிறது.
இங்கே தினமும் பல லட்சம் பேர் பயணம் செய்வது வழக்கம். அதேபோல் இரவு ரயில் இருப்பவர்கள், அதிகாலை ரயில் இருப்பவர்கள் இங்கே இரவில் படுத்து தூங்குவதும் வழக்கம். இதற்காக இங்கே ஓய்வு அறைகள் கூட உள்ளன.
மரணம்: இந்த நிலையில்தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள அரங்கில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்துள்ளார். அங்கே தூக்கிட்டு இருந்த நிலையில் அந்த இளம்பெண் உடலை அங்கிருந்த பயணிகள் பார்த்து அலறி உள்ளனர்.
பல பெண்கள் அலறல் சத்தத்துடன் சென்று போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து பெண்ணின் உடலை மீட்டு ரயில் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்., இந்த தற்கொலைக்கு காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அந்த பெண் யார்.. எந்த ஊர் என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. சென்ட்ரல் ரயில் நிலையம் தினமும் பல ஆயிரம் பேர் பயன்படுத்தும் பரபரப்பான ரயில் நிலையம் ஆகும். அப்படிப்பட்ட ஒரு பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications