ட்ரெஸ்ஸுக்குள் ரூ. 1 கோடி தங்கப்பசை.. துபாயில் இருந்து கடத்தி வந்த இளம்பெண்.. சென்னையில் கைது!
சென்னை: துபாயில் இருந்து 1.7 கிலோ தங்கப்பசையை ஆடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த இளம்பெண், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் அதிகளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இது தொடர்பாக, சுங்க அதிகாரிகள் நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தி, கடத்தி வரப்படும் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், துபாய் சார்ஜாவில் இருந்து விமானத்தில் சென்னை வந்த இளம்பெண்ணிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்ததில், அந்தப் பெண் தனது ஆடைக்குள் தங்கப்பசையை மறைத்து வைத்து இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதை அடுத்து அவர் ஆடைக்குள் மறைத்து துபாயில் இருந்து கடத்தி வந்த 1.7 கிலோ தங்கப்பசையை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதன் சர்வதேச மதிப்பு சுமார் ஒரு கோடியே 7 லட்சம் ரூபாய் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தங்கப்பசையை ஆடைக்குள் மறைத்து கடத்தி வந்த சென்னையை சேர்ந்த இளம்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Gold Price Today: தங்கம் விலை மளமளவென சரிந்தது.. 2வது நாளாக இன்றும் குறைந்தது.. நகை பிரியர்கள் குஷி! -
தங்க நகை வாங்குவோருக்கு 'ரெட் கார்பெட்' வரவேற்பாம்.. குஷியில் வங்கிகள்.. ஏன் தெரியுமா? -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
தங்கம் விலை தொடர் உயர்வா! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. கெவின் வார்ஷ் முடிவில் தான் எல்லாமே இருக்கு! -
Gold Price Today: 3 நாள் உயர்வுக்கு பிரேக்.. இன்று குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications