இரண்டு கைகள் இல்லாத இளைஞர்.. தமிழகத்தில் கார் ஓட்ட லைசென்ஸ் வாங்கி புதிய சாதனை
சென்னை: சென்னையைச் சேர்ந்த இரட்டைக் கையை இழந்த தான்சென் என்ற 31 வயது இளைஞர், தமிழகத்தின் முதல் கார் ஒட்டுநர் உரிமம் பெற்ற மாற்றுத்திறனாளி (இரண்டு கை இழந்தவர்) என்ற சாதனையை படைத்துள்ளார்.
இரண்டு கை மற்றும் இரண்டு கால்கள் நன்றாக உள்ளவர்களே இன்றைக்கு கார் ஓட்டி லைசென்ஸ் வாங்குவது எளிதானது அல்ல.. ஆனால் இரண்டு கைகளையும் இழந்த தான்சென் என்ற 31 வயது இளைஞர், தமிழ்நாட்டில் முதல்முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளார். விடா முயற்சி மற்றும் நம்பிக்கை, போராட்டம் என இதற்காக அவர் நடத்திய அத்தனை விஷயங்களும் அசாத்தியமானது..

சென்னை வியாசர்பாடி பெரியார் நகரைச் சேர்ந்த 31 வயதாகும் தான்செனுக்கு 10 வயது இருக்கும் போது, உயர் அழுத்த கம்பியில் சிக்கியதால் அவரது கைகள் முழங்கைக்கு கீழே வெட்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை கண்டு ஆரம்பத்தில், அவரும் அவரது குடும்பத்தினரும் பெரும் சோகத்திற்கு ஆளாகினார்கள்.
மின்சார விபத்தில் மூட்டுக்கு கீழ் இரண்டு கைகளையும் இழந்த போதிலும், நம்பிக்கையை அவர் இழக்கவில்லை. படிப்படியாக தனது அன்றாட வேலைகளை யார் உதவியும் இல்லாமல் அவரே செய்ய கற்றுக்கொண்டார்.
ஒரு வழியாக கால்கள் மூலம் எழுதவும் கற்றுக்கொண்ட அவர், நீந்தவும் டிரம்ஸ் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். அத்துடன் படிப்பிலும் சாதித்தார். விடாமுயற்சியால் இன்ஜினிரியங் படித்து முடித்த பின், பி.எல். படித்த தான்சென், தற்போது எம்.எல். படித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி, ஒன்றரை வயதில் மகள் இருக்கிறார்.
இவருக்கு கார் ஓட்ட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தொழிலதிபர் ஸ்ரீவாரி சங்கர், நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோரிடம் கூறியுள்ளார். அவர்களின் உதவியுடன் கார் ஓட்டுவதற்கு தான்சென் கற்றுக்கொண்டார். ஆனால் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்தபோது நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டன. இதையடுத்து, சென்னை கே.கே. நகரில் உள்ள புனர்வாழ்வு மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு, அவருக்கு ஏற்ப காரின் வடிவமைப்பை மாற்றியமைக்க வலியுறுத்தினார்கள். பின்னர் மாற்றுத்திறனாளியான வழக்கறிஞர் தான்செனிடம், கியர் முறையைக் கையாளும்படி அறிவுறுத்தினார்கள். மருத்துவமனையின் உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வியல் துறை இயக்குநர் திருநாவுக்கரசு மற்றும் மருத்துவர்கள் வழிகாட்டுதலின்படி ரெட்டேரி ஆர்டிஓ அலுவலகத்தில் தான்சென் ஓட்டுநர் உரிமத்தை பெற்றார். தமிழகத்திலேயே முதல்முறையாகவும், நாட்டில் மூன்றாவது நபராகவும் இரண்டு கைகள் இல்லாத ஒருவர், கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஓட்டுர் உரிமம் பெற்றார்.
ஏப்ரல் 22ம்தேதி வழக்கறிஞர் தான்சென் தனது சிவப்பு நிற ஸ்விஃப்ட்டில, காரின் சாவி, கால் விரல்கள் மூலம் ஸ்டார்ட் செய்தார். இந்த வீடியோ காட்சி கே.கே.நகரில் உள்ள அரசு மறுவாழ்வு மருத்துவக் கழகத்தில் மருத்துவர்களின் தொலைபேசிகளில் ஒளித்துக் கொண்டிருந்தது. விபத்தில் இரு கைகளையும் இழந்த தான்சென், சீட் பெல்ட்டைக் கட்டிக்கொண்டு, ஸ்டியரிங்கில் கால் வைத்து ஓட்டிச் சென்ற காட்சியை கண்டு அவர்கள் ஆரவாரம் செய்தனர். கே.கே.நகரில் உள்ள அரசு மறுவாழ்வு மருத்துவக் கழக மருத்துவர்கள் உடல் தகுதி குறித்த அளித்த உறுதியை அடுத்து, சென்னை வடக்கு ஆர்டிஓ மாற்றுத்திறனாளி தான்செனுக்கு மாற்றியமைக்கப்பட்ட கார் ஓட்டுவதற்கான 10 ஆண்டு உரிமத்தை வழங்கினார். இதை கண்டு மருத்துவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வியல் துறை இயக்குநர் பி.திருநாவுக்கரசு கூறுகையில், “மாற்றுத் திறனாளியான தான்சென் கார் ஓட்டுவதைப் பார்த்து மகிழ்ந்து போன நாங்கள்,மற்றவர்களின் பாதுகாப்பையும் மிகவும் கவனத்தில் எடுத்துக்கொண்டோம். முழங்கை மூட்டு கைகளிலேயே காரின் 'ஸ்டேரிங்’ பிடித்து ஓட்டிய அவருக்கு, பேலன்ஸ் சரியாக இருக்கிறதா என்பதையும் கண்டறிந்தோம்.
அவர் கைகளின் முட்டி மற்றும் கால்கள் மூலம் காரை ஓட்டி காண்பித்தார். தானாக காரின் கதவைத் திறந்தார், சீட் பெல்ட் போட்டார். அவசர நேரத்தில் பிரேக் பிடித்தார், ஹாரன் அடித்தார். இப்படி பல்வேறு செயல்களை கடந்த மூன்று மாதங்களாக கண்காணித்தோம். சில பயிற்சிகளும் அவருக்கு வழங்கினோம்.
அவரது காரின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்த பின்னர் வழக்கறிஞர் தான்சென் நன்றாக கார் ஓட்டினார். அதனால், அவருக்கு ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான பரிந்துரை வழங்கினோம். தற்போது ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள அவர், மற்றவர்களைபோல நன்றாக கார் ஓட்டுகிறார் என்றார் மகிழ்ச்சியுடன்..
கார் ஓட்டுநர் உரிமம் பெற்ற தான்சென் கூறும்போது, “ 'நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தும் கச்சேரி உள்ளிட்டவற்றில் நான் டிரம்ஸ் வாசிக்கிறேன். இல்லாமல் போன எனது கைகளைப் பற்றி யாராவது என்னிடம் கேட்கும் வரை நான் ஊனம் இருப்பதாக நான் உணரவே இல்லை. எனக்கு கார் ஓட்ட ஆசை இருந்தது. எப்படி என்றால். இந்தூரைச் சேர்ந்த விக்ரம் அக்னிஹோத்ரி இரட்டை கையை இழந்த நிலையிலும் 2016 இல் ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றவர் ஆவார். அவரை போல் கார் ஓட்டி ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் எப்படி ஓட்டுநர் உரிமம் பெறுவது என்று தெரியவில்லை.
அதேநேரம் 2023 டிசம்பரில், கேரளாவில் ஒரு கை இல்லாத பெண் ஓட்டுநர் உரிமம் பெறுவதைப் படித்தபோது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு நான் மறுவாழ்வு மருத்துவ நிறுவனத்தில் மருத்துவர்களைச் சந்தித்தேன். மாற்றுத்திறனாளிகள் ஓட்டுநர் உரிமம் பெற இந்த மருத்துவமனையின் மூலம் தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றார்கள்.
எனக்கு மருத்துவர்கள் மற்றும் நடிகர் லாரன்ஸ் ஆகியோர் உதவினார்கள். நான் தறபோது ஓட்டும் கார் 'ஆட்டோமெடிக் கியர் மற்றும்பிரேக்’ தன்மை கொண்டது. இதன் காரணமாக, திருப்பதி மலையிலும் தானாக கார் ஓட்டினேன். எனக்கு உதவிய நடிகர் ராகவா லாரன்ஸ், ஸ்ரீவாரி சங்கர் மற்றும் மருத்துவர்கள், ஆர்டிஓ உள்ளிட்டோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு கூறினார்.
-
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
காடுவெட்டி குரு மகள் பேச்சை பார்த்தீங்களா? அன்புமணிக்கு டபுள் டென்ஷன்.. வன்னியர் ஓட்டு யாருக்கு லாபம் -
நைஸா பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. தவெக விஜய் அரசியலில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பம் -
எடப்பாடி பெயரை கூட.. மோடி சொல்லாதது இதற்குத்தானா? பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ ஸ்கெட்ச்.. போச்சு -
தூண்டில் போடும் டெல்லி! தன் பாட்டுக்கு விஜய்.. இப்ப தான் ஆட்டம் ஆரம்பம்.. 2026-ன் கிங் மேக்கர் யார்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி?












Click it and Unblock the Notifications