'நீ ரிவ்யூ பண்ணதைக்கூட ஏத்துக்கிறேன, கடைசி வரியில ஒரு ரெகமெண்டேஷன் கொடுத்தே பாரு'..‘ வேறலெவல் ரிவியூ

சென்னை திருமுல்லைவாயல் போலீஸ் ஸ்டேசனக்கு ஒரு இளைஞர் கொடுத்த ரிவியூ சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமுல்லைவாயல் டி 10 போலீஸ் ஸ்டேசனுக்கு ஒரு இளைஞர் கொடுத்த ரிவியூ சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது. " நீ ரிவ்யூ பண்ணதைக்கூட ஏத்துக்கிறேன்...கடேசி வரியில ஒரு ரெகமெண்டேஷன் கொடுத்தே பாரு..." என்று கிண்டலாக டாக்டர் லோகநாதன் என்பவர் இதை குறிப்பிட்டு ட்விட்டரில் போட்ட பதிவு பெரிய அளவில் பேசப்படுகிறது.

நாம் போகும் இடம், வரும் இடம் இடத்திற்கு எல்லாம் இப்போது ரிவியூ கொடுக்க ஆரம்பித்து விட்டோம். கூகுள் ரிவியூ, ஆப்களுக்கு மட்டுமல்ல.. எல்லா இடங்களுக்குமே கூகுள் ரிவியூ இப்போது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இப்போது எல்லாம் பக்கத்தில் போய் விசாரித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டு பள்ளிகளில் மக்கள் சேர்ப்பது இல்லை. மாறாக கூகுள் ரிவியூவைத்தான் நம்புகிறார்கள். ஆனால் அப்படி கூகுள் ரிவியூக்கள் போலியாக கொடுக்கப்படுவதும் உண்டு. ஆனால் இதை உண்மை என்று நம்பி பள்ளிகளில் சேர்த்துவிட்டு கடைசியில் அவதிப்படுகிறார்கள்.

மோசமான மருத்துவமனை

மோசமான மருத்துவமனை

இதேபோல் தான் மருத்துவமனையில் எது சிறந்தது என்று பார்க்க ரிவியூ பார்க்கிறார்கள், மக்களின் கருத்துக்களை உண்மை என்று நம்பி மருத்துவமனையில் அவசரத்திற்கு சேருகிறார்கள். ஆனால் அங்கு போன பின்னர் தான் தெரிகிறது.. அய்யோ மிக மோசமான மருத்துவமனை என்று.. தெறித்து ஓடுகிறார்கள்

உணவு

உணவு

இதுமட்டுமல்ல... மக்கள் அதிகம் போகும் இடம் ஓட்டல், சாப்பிட ஓட்டலுக்கு போக விரும்பும் மக்கள் ஓட்டலிலுக்கு மக்கள் எப்படி ரிவியூ கொடுக்கிறார்கள் என்பதை பார்க்கிறார்கள். பலர் ஓட்டலை பாராட்டினால் அந்த ஓட்டலில் போய் சாப்பிடுகிறார்கள். ஆனால் அதிலும் போலியான கமெண்ட்கள் போடப்படுவதால் உண்மையில் நல்ல ரிவியூவை கண்டுபிடிப்பது கடினம் தான்.

கூகுள் ரிவியூ

கூகுள் ரிவியூ

சரி விஷயத்திற்கு வருவோம்.. அமேசான், பிளிப்கார்டில் வரும் பொருட்களுக்கு மட்டுமல்ல, ஓட்டலுக்கு, நமக்கு பிடித்த ஆப்களுக்கு, பள்ளிகளுக்கு, மருத்துவமனைகளுக்கு, ஜிம்களுக்கு, டெய்லர் கடைகளுக்கு, டியூசன் சென்டர்களுக்கு, இந்தி பயிற்சி வகுப்புகளுக்கு, பரத நாட்டிய வகுப்புகளுக்கு, ஆங்கில பயிற்சி வகுப்புகளுக்கு என பல விஷயங்களுக்கு கூகுள் ரிவியூ போடப்படுகிறது.

திருமுல்லைவாயல்

திருமுல்லைவாயல்

அப்படித்தான் சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் போலீஸ் ஸ்டேசனுக்கு ஒரு இளைஞர் ரிவியூ கொடுத்துள்ளார். அந்த ரிவியூ பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த ரிவியூவில், பைக் டாக்குமெண்ட் இல்லாத காரணத்தால் திருமுல்லைவாயல் ஸ்டேசனுக்கு ஒரு நாள் நள்ளிரவு அழைத்துச் செல்லப்பட்டேன். மெயின் ரோட்டில் இருந்த அந்த போலீஸ் ஸ்டேசன் மிகவும் சுத்தமாக இருந்தது. அங்கிருந்த காவலர்கள் என்னை துன்புறுத்தவில்லை. மாறாக அன்புடன் நடத்தினார்கள். என்னிடம் பிங்கர் பிரிண்ட் வாங்கி கொண்டு எந்த லஞ்சமும் வாங்காமல் அனுப்பி விட்டார்கள். உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக போக வேண்டிய இடம் என்று ரெக்கமண்டேசன் கொடுத்துள்ளார்.

கிண்டல்

கிண்டல்

இதை பாரும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து விமர்சித்து வரும் நிலையில், டுவிட்டரில் டாக்டர் லோகநாதன் என்பவர் வெளியிட்ட பதிவில், "டேய்.. நீ ரிவ்யூ பண்ணதைக்கூட ஏத்துக்கிறேன்டா...கடேசி வரியில ஒரு ரெகமெண்டேஷன் கொடுத்தே பாரு..." என்று கிண்டலாக பெரிய அளவில் பேசப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+