Manorama: விஜய் முதல்வரானதால் நடிகை மனோரமாவுக்கு பெருமை! அப்படி என்ன சாதனை?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் முதல் தேர்தலிலேயே தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டது எத்தனை பேருக்கு பெருமையோ அது போல் அவருடன் நடித்த ஆச்சி மனோரமாவுக்கு பெருமையோ பெருமை. காரணம் விஜய்யுடன் நடித்ததால் மனோரமா 7 முதல்வர்களுடன் நடித்து பெருமை சேர்த்துள்ளார்.
தமிழ் திரையுலகில் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்த 'ஆச்சி' மனோரமா , இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் அவரது புகழ் மங்காமல் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. தற்போது தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால், மனோரமாவின் சாதனையில் புதிய மகுடம் ஒன்று இணைந்துள்ளது.

இந்திய திரையுலக வரலாற்றிலேயே 7 முதலமைச்சர்களுடன் கலைப்பயணம் மேற்கொண்ட ஒரே கலைஞர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் தற்போது தன்வசமாக்கியுள்ளார்.
அரசியல் ஆளுமைகளும் ஆச்சியின் கலைப்பயணமும்
மனோரமா திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே மேடை நாடகங்களில் ஜாம்பவான்களுடன் கைகோர்த்தவர். அவர் பணியாற்றிய 7 முதலமைச்சர்களின் விவரங்களை பார்க்கலாம்.
பேரறிஞர் அண்ணா , கருணாநிதி: தனது ஆரம்பகாலத்தில் மேடை நாடகங்களில் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி ஆகியோருடன் இணைந்து நடித்தார். குறிப்பாக, திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்பும் நாடகங்களில் இவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான பல படங்களில் மனோரமா முத்திரை பதித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்: எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 'கண்ணன் என் காதலன்' போன்ற படங்கள் இன்றும் பேசப்படுபவை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா: ஜெயலலிதாவுடன் பல படங்களில் தோழியாகவும், உறவினராகவும் நடித்தவர் மனோரமா. 'கலாட்டா கல்யாணம்' படத்தில் இவர்களது கூட்டணி மிகவும் பிரபலம்.
என்.டி. ராமராவ் (NTR): ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆருடன் தெலுங்குத் திரையுலகில் மனோரமா இணைந்து பணியாற்றியுள்ளார். இதன் மூலம் அண்டை மாநில அரசியலின் பெரும் தலைவருடனும் கலைப்பயணம் மேற்கொண்ட பெருமை இவருக்கு உண்டு.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்: கருணாநிதி கதை-வசனம் எழுதிய 'ஒரே ரத்தம்' என்ற திரைப்படத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து மனோரமா நடித்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜய்: தற்போது தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைப் படைத்து முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய்யுடனும் மனோரமா நடித்துள்ளார். விஜய்யின் ஆரம்பகால படமான 'ரசிகன்' உள்ளிட்ட படங்களில் ஆச்சி மனோரமா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மனோரமா: ஒரு சாதனையின் சரித்திரம்
பள்ளத்தூர் பாப்பாத்தி என்ற பெயரில் பிறந்து, மேடை நாடகங்களில் பாடகியாக அறிமுகமாகி, பின்னர் நகைச்சுவை அரசியாக உருவெடுத்தவர் மனோரமா.
'தில்லானா மோகனாம்பாள்' படத்தின் ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரம் தொடங்கி, 'ஆத்தாள்' வேடங்கள் வரை அவர் செய்யாத கதாபாத்திரங்களே இல்லை.
"ஒரு நடிகை உயிரோடு இருக்கும்போது மட்டுமல்லாது, அவர் மறைந்த பிறகும் அவர் நடித்த சக நடிகர் ஒரு மாநிலத்தின் முதல்வராவதன் மூலம், அந்த நடிகையின் சாதனைப் பட்டியல் நீள்வது என்பது உலக அளவில் இதுவே முதல் முறையாக இருக்கும்."
வெள்ளித்திரையில் 1500-க்கும் மேற்பட்ட படங்கள், கின்னஸ் சாதனை, பத்மஸ்ரீ விருது எனப் பல உச்சங்களைத் தொட்ட மனோரமாவுக்கு, '7 முதல்வர்களுடன் நடித்தவர்' என்ற இந்த புதிய அந்தஸ்து, அவரது புகழை இந்தியத் திரையுலக வரலாற்றில் யாராலும் எட்ட முடியாத உயரத்தில் வைத்துள்ளது.
அண்ணாவில் தொடங்கி விஜய் வரை என மூன்று தலைமுறை அரசியல் தலைவர்களுடனும் அவர் பயணித்திருப்பது மெய்சிலிர்க்க வைக்கும் உண்மையாகும்.
-
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications