மேகதாது விவகாரம்.. விவசாயிகள் சந்திப்பு குறித்து உதயநிதிக்கு ஆதவ் பதில்
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் 2026 -27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவதாரம் நடைபெற்று வருகிறது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவதில் தவெக அரசு பயம் ஏன் என்றும், விவசாயிகளை சந்திக்கவும் தமிழ்நாடு அரசு ஏன் மறுக்கிறது என்றும் கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. கவிஞர் புவியரசு, எழுத்தாளர் பூமணி உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் வாசித்தார். தொடர்ந்து கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மேகதாது அணை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக அரசின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தார்.

உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தவெக ஆரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மேகதாது அணை திட்டத்தை முன்னெடுப்பதில் இதுவரை இல்லாத வேகத்தில் கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதி கொடுத்துவிட்டு அரைகுறையாக தள்ளுபடி செய்தது ஏன். காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கின்றன. ஆனால், இங்கே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டவும், விவசாயிகளை சந்திக்கவும் தமிழ்நாடு அரசு மறுக்கிறது.
காவிரி விவகாரத்தில் மாநில நலன் என்று வந்துவிட்டால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு பார்க்காமல் ஓரணியில் நிற்கின்றனர். அப்படி நம் ஒற்றுமையை கர்நாடக அரசுக்கும் மத்திய அரசுக்கும் காட்ட வேண்டும் என்று தான் நாங்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட கோரிக்கை வைத்தோம். விவசாயிகள் மீது அக்கறை உள்ள அரசு இதை தானாகவே செய்திருக்க வேண்டும் என்று பேசினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, எதிர்க்கட்சித் தலைவர் பேசுகையில் ஒரு தவறான தகவலை அளித்தார். முதல் முறையில் பேசும்போது பிரதமருக்கு முதல்வர் ஒருமுறை கடிதம் எழுதினார் என்றும், இருமுறை கடிதம் எழுதினார் என்றும் கூறினார். விவசாயிகளை சந்திக்கவில்லை என்றும் கூறியிருந்தார். இன்றைக்கு மதியம் டெல்டாவின் அனைத்து விவசாய சங்கங்களை நீர்வளத் துறை அமைச்சர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களை சந்திக்கவுள்ளனர் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
