ஆதார் கார்டு + வங்கி கணக்கு இருக்குல்ல? ஆதார் அட்டையில் எந்த மொபைல் நம்பர் இருக்கு? இப்படி பாருங்க
சென்னை: ஆதார் கார்டுகளை ஏன் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்? ஆதார் அட்டைகளின் பயன் என்னென்ன? உங்கள் ஆதார் கார்டில் உள்ள பழைய நம்பர் என்ன? தெரியுமா?
ஆதார் அட்டைகள், இந்திய குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாகிவிட்டது.. அடையாள ஆவணமாக மட்டுமல்லாமல், மக்களின் அத்தியாவசிய தேவைக்கான அட்டையாகவும் மாறிவிட்டது.

குறிப்பாக, மக்கள் நலத்திட்டங்களில் உதவிகளை பெறுவதற்குக்கும் ஆதார் கார்டுகள் அவசியமாகின்றன.. சிம் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆதாரை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ள நிலையில், ரேஷன் கார்டிலும் ஆதாரை இணைத்தாக வேண்டும்.
ஆதார் கார்டு பல்வேறு மோசடிகளைக் கண்காணிக்கவும் அதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை, இன்னொருவர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்கும், மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.. வங்கிக்கணக்கு விவரங்களை யாரிடமும் சொல்லக்கூடாது என்பதுபோல, ஆதார் விவரங்களையும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
ஆவணங்கள்: முன்பெல்லாம் அடையாள அட்டைகளை, எங்கு சென்றாலும் நம்முடனே எடுத்து செல்ல வேண்டியிருந்தது... ஆனால், இப்போது தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு மத்திய, மாநில அரசுகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன... முக்கிய ஆவணங்களை சாஃப்ட் காப்பி வடிவில் செல்போனிலேயே வைத்துக்கொள்ள முடியும்.
ஆதார் அட்டைகள் என்றில்லாமல் , பான் கார்டு , டிரைவிங் லைசென்ஸ் இப்படி எந்த ஆவணங்களாக, இருந்தாலும், ஸ்மார்ட்போனிலேயே பதிவிறக்கம் செய்து எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
ஆதார் கார்டு: அதேபோல, ஆதார் கார்டில் எந்த செல்போன் நம்பர், அல்லது ஈமெயில் இணைக்கப்பட்டுள்ளது என்பது பற்றி பலரும் அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.. அதாவது, ஆதார் சரிபார்ப்பு செய்யும்போது ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் அல்லது ஈமெயில் ஐடியில் பயனர் சரிபார்ப்பு குறியீடு அனுப்பப்படும்... அதை வைத்தே ஆதாரில் அப்டேட் செய்ய முடியும்...
ஆனால், நம்மில் பலர் எந்த மொபைல் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைத்தோம் என்பதை மறந்திருப்போம்.. ஏனெனில், ஆதார் நமக்கு முதன்முதலில் வழங்கப்பட்டபோது பழைய செல்போன் நம்பரை வைத்திருப்போம்.. அந்த பழைய நம்பருக்குதான் ஓடிபி சென்றுக்கொண்டிருக்கும்.
ஆனால் நிறையப் பேர் அந்த பழைய நம்பரையே இப்போது மாற்றியிருப்பார்கள்.. அந்த நம்பர் உங்கள் நினைவிலும் இருக்காது. எனவே, பழைய நம்பரை நீங்கள் கண்டுபிடித்து தெரிந்து கொள்வது அவசியமாகும்.
இதுதான் வழிமுறை: எனவே, ஆன்லைன் மூலமாக ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை கண்டுபிடிக்கவே இந்த புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
- UIDAI ன் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று, "எனது ஆதார்" என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்...
- பிறகு கீழே வந்தால் Download Aadhaar, Order Aadhar PVC Card என்று ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். இதில் 8வதாக Verify Email/Mobile என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை சரிபார்த்து கொள்ளலாம்.
- ஆதார் அட்டை பயனர்கள் தங்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடியை ஆதாருடன் இணைக்க விரும்பினால், உங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் சென்று அதையும் செய்துகொள்ளலாம்.
பழைய செல்போன்: ஒருவேளை உங்களிடம் பழைய செல்போன் நம்பர் இல்லாமல், அல்லது அந்த நம்பர் நினைவிலும் இல்லாமல் இருந்தால் ஆதார் மையத்திற்கு சென்றால், அங்கு உங்களுடைய பழைய செல்போன் எண்ணை மாற்றி தருவார்கள்..'
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications