உங்க ஆதார் கார்டில் எந்த மொபைல் எண் கொடுத்திருக்கிறீர்கள் என தெரிய வேண்டுமா? சிம்பிள்! இத படிங்க
சென்னை: பிறப்பு தொடங்கி இறப்பு வரை ஆதார் எண் என்பது தற்போது அனைத்திற்கும் கட்டாயமாகிவிட்டது. ஆனால் ஆதார் எண்ணில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்றாலோ, அல்லது மொபைல் எண்ணை மாற்ற வேண்டும் என்றாலோ ஏற்கனவே அதில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அவசியம். ஆனால் பலருக்கு இதில் என்ன எண்ணை பதிவு செய்துள்ளோம் என்று நினைவிருக்காது. கவலைப்படாதீர்கள் அந்த எண்ணை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
இந்தியாவில் ஆதார் கொண்டுவரப்பட்டதே பெரும் சர்ச்சைகளுக்கு இடையில்தான். தொடக்கத்தில் ஆதார் கட்டாயம் இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் பின்னாட்களில் இது அனைத்திற்கும் கட்டாயமாக்கப்பட்டது. தொடக்கத்தில் ஆதாரில் வேறு ஒரு நம்பரை கொடுத்திருப்பீர்கள். ஆனால் தற்போது இந்த ஆதார் அட்டையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். அல்லது புதிய செல்போன் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

இந்த இரண்டு விஷயங்களுக்கும் ஏற்கனவே ஆதாருடன் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். எனவே பழைய நம்பர் அவசியமாகும். ஆனால் பழைய நம்பராக எதை கொடுத்தோம் என்று பலருக்கும் நினைவிருக்காது. என்னதான் முயற்சி செய்தாலும் அந்த பழைய நம்பருக்குதான் ஓடிபி சென்றுக்கொண்டிருக்கும். எனவே பழயை நம்பரை கண்டுபிடிப்பது அவசியமாகும். இதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சில வழிமுறைகளை கொடுத்திருக்கிறது.
அதாவது முதலில் https://myaadhaar.uidai.gov.in/ எனும் வெப்சைட்டை ஓபன் செய்து கொள்ள வேண்டும். அல்லது மொபைலில் mAadhaar அப்ளிகேஷன் இருந்தால் அதையும் ஓபன் செய்துகொள்ளலாம். இப்படி ஓபன் செய்தவுடன் Welcome to MyAadhaar என நீல நிறத்தில் ஒரு பேஜ் ஓபனாகும். அதை தாண்டி அப்படியே கீழே வந்தால் Download Aadhaar, Order Aadhar PVC Card என சில ஆப்ஷன்கள் இருக்கும். இதில் 8வதாக Verify Email/Mobile என ஒரு ஆப்ஷன் இருக்கும். இதை கிளிக் செய்ய வேண்டும்.

இதன் பின்னர் ஓபனாகும் பேஜில் Verify Mobile Number மற்றும் Verify Email Address என இரண்டு ஆப்ஷன் காட்டும். நீங்கள் இதில் எதை சரிபார்க்க வேண்டுமோ அதை பதிவு செய்து கொள்ளலாம். அடுத்து மூன்று லைன்கள் இருக்கும். அதில், முதலில் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் செக் செய்ய வேண்டிய மொபைல் எண் மற்றும் கேப்சாவை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் இறுதியாக Send OTP என ஒரு பட்டன் இருக்கும். அதனை கிளிக் செய்தால் நீங்கள் இங்கு குறிப்பிட்ட எண்தான் ஆதாரில் பதிவாகியிருக்கிறது எனில் அந்த எண்ணுக்கு ஓடிபி செல்லும். அதேநேரம் இந்த பேஜில் பச்சை நிறத்தில் ஒரு மெசேஜ் வரும். இல்லையெனில் சிவப்பு நிறத்தில் நீங்கள் சரியான மொபைல் எண்ணை பதிவு செய்யவில்லை என்று ஒரு பாப்அப் போல குறுஞ்செய்தி வரும்
ஒருவேளை உங்களிடம் பழைய மொபைல் எண் இல்லாமல், அந்த எண் நினைவிலும் இல்லாமல் இருந்தால் ஆதார் மையத்திற்கு சென்றால் அங்கு உங்களுடைய பழைய மொபைல் எண் மாற்றி கொடுக்கப்படும். அதேபோல உங்களுடைய மின்னஞ்சல் ஐடியையும் சேர்த்துக்கொள்ளலாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications