"ஆதார் கார்டு" வெச்சிருக்கீங்களா? பான் கார்டு? அப்ப முதல்ல இது பண்ணிடுங்க.. இல்லாட்டி ரூ.1000 ஃபைன்
சென்னை: ஆதார் மற்றும் பான் கார்டை நீங்கள் இணைத்துவிட்டீர்களா? உடனடியாக இணைத்துவிடுங்கள்.. இல்லையானால், உங்களுக்குதான் இந்த முக்கிய செய்தி..!!
பான் கார்டுகள் என்பது பொதுவாக பயன்பாட்டில் நம்முடன் உள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு அடிப்படையான ஒன்றாக இந்த பான் கார்டுகள் உள்ளன..
ஆதார் கார்டுகள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு இந்த பான் அட்டைகளும் முக்கியமானவை.. அதனால்தான், இவைகள் இரண்டையும் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து, பொதுமக்களை வலியுறுத்தியபடியே உள்ளது.

ஆதார் அட்டைகள்: மத்திய அரசின் அத்தனை திட்டங்களுக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது... மேலும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு இந்த பான், ஆதார் இணைப்பு அவசியம் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.. இந்த பான், ஆதார் இணைப்புக்கு நிறைய அவகாசத்தை மத்திய அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.. மேலும் பான் கார்டு இல்லாமல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும் என்றும் சுட்டிக்காட்டி வருகிறது.
இப்போதும்கூட, பான் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை 2023 ஜூன் 30 வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது... அப்படி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணைக்கப்படாவிட்டால், ஒருவருடைய என்பிஎஸ் கணக்கில் பரிவர்த்தனைகள் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. அந்தவகையில், ஆதார் கார்டு - பான் கார்டு இணைப்பை உடனடியாக செய்ய பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்..
காலக்கெடு: ஒருவேளை, ஜூலை 1, 2022 அல்லது அதற்குப் பிறகு பான்-ஆதார் இணைப்பு முடிந்தால், ரூ.1,000 கட்டணம் விதிக்கப்படும்.. எந்த சூழ்நிலையிலும் தாமதமான பான்-ஆதார் இணைப்புக்காக 234H செலுத்திய கட்டணத்தை திரும்பப் பெற முடியாது என்றும் கறாராக தெரிவிக்கப்பட்டுள்ளது... 30 நாட்களுக்குப் பிறகு உரிய அதிகாரிக்கு தகவலை தெரிவித்து ரூ.1,000 செலுத்திய பிறகுதான், பான் நம்பரை நீங்கள் மறுபடியும் இயக்க முடியும்.

அதன் வழிமுறைகள்தான் இவை:
இ-ஃபைலிங் போர்ட்டலின் முகப்பு பக்கத்திற்குச் சென்று விரைவு இணைப்புகள் பிரிவில் ஆதார் இணைப்பைக் கிளிக் செய்யவும்.
உங்கள் பான் மற்றும் ஆதார் எண்ணை பதிவிடவும்
இ-பே வரி மூலம் செலுத்த "தொடரவும்" என்பதை கிளிக் செய்யவும்.
OTP பெற உங்கள் PAN ஐ உள்ளிடவும், PAN மற்றும் மொபைல் எண்ணை உறுதிப்படுத்தவும்.
OTP சரிபார்ப்பிற்கு பின்னர், நீங்கள் e-Pay Tax பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள்.
வருமான வரி தாவலில் "தொடரவும்" என்பதைக் கிளிக் செய்யவும்.
AY ஐ 2023-24 ஆகவும், பணம் செலுத்தும் வகையை மற்ற ரசீதுகளாகவும் (500) தேர்ந்தெடுத்து, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
பணம் செலுத்துவதற்கு பட்டியலிடப்படாத வங்கிக் கணக்கு உங்களிடம் இருந்தால்பொருந்தக்கூடிய தொகை மற்றவர்களுக்கு எதிராக முன்கூட்டியே நிரப்பப்படும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications