இன்றோடு கடைசி நாளா? ஆதார் கார்டு இருக்கா? அப்டேட் தேதியை மாற்றிய மத்திய அரசு.. நோட் பண்ணுங்க
சென்னை: ஆதார் விவரங்களை திருத்த கால அவகாசம் ஜூன் 14ம் தேதி வரை கொடுக்கப்பட்டு இருந்தது. இன்றோடு இறுதி டெட் லைன் தற்போது மாற்றப்பட்டு உள்ளது.
அதன்படி புதிய இறுதி நாள் செப்டம்பர் 14ம் தேதியாக மாற்றப்பட்டு உள்ளது. தனிப்பட்ட கணக்குகளை பயன்படுத்தி இந்த ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி வரை விவரங்களைத் திருத்தலாம்.

முன்னதாக கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் ஆதார் விவரங்களை நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால் ஜூன் மாதம் 14ம் தேதிதான் அதற்கான கடைசி வாய்ப்பு என்று கூறப்பட்டது. அதற்கு முன்னதாக வெளியிட்ட அறிவிப்பில் டிசம்பர் 14 வரை இலவசமாகச் செய்யலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் இந்த அவகாசம் மார்ச் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பின் இதற்கான அவகாசம் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது புதிய இறுதி நாள் செப்டம்பர் 14ம் தேதியாக மாற்றப்பட்டு உள்ளது.
மோசடி: ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, 10 வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்களை, சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI வலியுறுத்தி உள்ளது.
ஆதார் முக்கியம்: ஆதார் கார்டு தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்டு முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.
மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியம் ஆகி உள்ளது. இந்த நிலையில்தான் ஒருவேளை ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு இலவச ஆன்லைன் வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. 10 ஆண்டுகளாக ஆதார் கார்டை அப்டேட் செய்யாதவர்கள், விலாசம் மாறியவர்கள், ஆதார் கார்டில் தவறான விவரங்கள் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.
ஆதார் மாற்றம்: உதாரணமாக உங்களின் பெயர் தவறாக இருந்தால் அல்லது வேறு விவரங்கள் தவறாக இருந்தால் ஆன்லைன் மூலம் அதை எளிதாக மாற்ற முடியும். இதற்கான வசதிகளை ஆதார் அமைப்பு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது.
UIDAI ஏற்படுத்தி கொடுத்துள்ள வசதிகள் மூலம் எளிதாக இந்த விவரங்களை மாற்ற முடியும். இனி மார்ச் 14ம் தேதி வரை இந்த மாற்றங்களை செய்ய கட்டணம் இல்லை. ஆன்லைன் மூலம் எளிதாக செய்ய முடியும். நேரில் ஆதார் மையத்தில் செய்வதற்கு மட்டும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
கட்டணம் இல்லை: myAadhaar பக்கம் மூலம் எளிதாக இவர்கள் விலாசத்தை மாற்றும் வசதி இருந்தது. ஆனால் தற்போது அந்த அவகாசம் நிறைவிற்கு வர உள்ளது. நேற்றோடு இந்த அவகாசம் முடிந்த நிலையில் இனி விலாசத்தை மாற்ற கட்டணம் செலுத்த வேண்டும்.
இச்சேவையை நேரிடையாக பெற இப்போதும் கட்டணம் உள்ளது. ஆனால் இதுவரை ஆன்லைன் வழியாக இலவசமாக பெற முடிந்தது. .
uidai.gov.in அல்லது https://myaadhaar.uidai.gov.in/genricPVC மூலம் ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடி அல்லது என்ரோல்மென்ட் ஐடி மூலம் இந்த அட்டையின் விலாசத்தை புதுப்பிக்க முடியும். இதற்கு கட்டணம் இப்போது இல்லை.. மை ஆதார் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை வைத்து லாகின் செய்து, அதிலேயே பணம் செலுத்தாமல் விவரங்களை மாற்ற முடியும் முடியும்.
இணையதளம் மூலம் இலவசமாக திருத்திக் கொள்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 14 வரை உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications