ஆதார் அட்டை + ரேஷன் கார்டு.. இதை தவறவிட்டால் சலுகைகள் கிடைக்காது.. ரொம்ப முக்கியம்.. ஆன்லைனில் ஈஸி
சென்னை: மிக மிக முக்கிய ஆவணமாகிவிட்ட ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை எப்படி அப்டேட் செய்வது தெரியுமா? இதோ ஆன்லைனிலேயே அதற்கு வழியுண்டு.
ஆதார் கார்டுகளும் சரி, ரேஷன் கார்டுகளும் சரி, இப்போது நடைமுறை வாழ்க்கையில் தவிர்க்க முடியாததாகிவிட்டது.. தமிழக அரசின் திட்டங்களை பெறவும், பொதுவிநியோக கடைகளில் விற்பனை செய்யப்படும் மலிவு விலை அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை பெறவும் ரேஷன் அட்டைகள் அவசியமாகும். அதுமட்டுமல்ல, பல்வேறு இடங்களில் ஆவணமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது..

அங்கீகாரம்: ஆதார் அட்டைகளை எடுத்துக்கொண்டால், இந்திய பிரஜையின் அங்கீகாரத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.. ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை, இன்னொருவர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்கும், மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.
எனவே, ரேஷன் கார்டும்சரி, ஆதார் கார்டும் சரி, இரண்டுமே முக்கிய ஆவணங்களாகவும், அடையாளமாகவும் உள்ளதால், இவைகளை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும்.
இரண்டையுமே அடிக்கடி அப்டேட் செய்து கொள்ளவும் வேண்டும்.. இந்த கார்டுகளை எப்படி ஆன்லைன் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம் தெரியுமா? இந்த கார்டுகளை புதுப்பித்து கொள்வதற்கு முன்பு, அதற்கு தேவையான சில ஆவணங்கள் தயாராக வைத்து கொள்ள வேண்டும்.
ஆதார் அட்டைகளை ஆன்லைனில் புதுப்பித்து கொள்ள என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
- uidai.gov.in.என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் நுழைந்து, ஆதார் அப்டேட் படிவத்தை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்- விண்ணப்பப்படிவத்தை, பிழையில்லாமல் பூர்த்தி செய்த, அருகிலிருக்க ஆதார் சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
- நீங்கள் சமர்ப்பித்திருக்கும் பயோமெட்ரிக் விவரங்களை ஆதார் சேவை மைய அதிகாரிகள் சரிபார்த்து, விவரங்களை அப்டேட் செய்வார்கள். இதற்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும்.
- இறுதியில் உங்களுக்கு மையத்திலிருந்து ஒரு ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.. அதனை வைத்து உங்களின் அப்டேட் விவரங்களை கண்காணிக்கலாம்.
ரேஷன் கார்டுகளை எப்படி ஆன்லைனில் அப்டேட் செய்வது தெரியுமா?
- உணவு மற்றும் வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ https://epds.nic.in/ என்ற வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும்.
- "Ration card correction" என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், ஒரு புதிய பக்கம் திறக்கும்.. அதில் உங்களது ரேஷன் கார்டு நம்பர் மற்றும் ஆதார் கார்டு நம்பர்களை பிழையின்றி பதிவிட்டு, "Search" என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது ரேஷன் கார்டு தகவல் ஸ்கிரீனில் தோன்றும்போது, புதுப்பிக்க விரும்பும் தகவலை மாற்ற வேண்டும்.
- ஆன்லைன் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் சரிபார்க்க வேண்டுமானால், "Application status" என்ற ஆப்ஷனுக்கு சென்று, ரேஷன் கார்டு எண் மற்றும் ஆதார் அட்டை எண்ணை பதிவிட வேண்டும். இறுதியில், "Search" பட்டனைக் கிளிக் செய்தால் உங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலை ஸ்கிரீனில் தோன்றும்.












Click it and Unblock the Notifications