ஆதார் கார்டு.. "இதை" செய்யாவிட்டால் ரேஷன் கார்டுகள் ரத்தாகிவிடுமாம்.. வந்தது அறிவிப்பு.. உடனே முடிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைத்து விட்டீர்களா? இதை செய்யாவிட்டால், ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்ற தகவல்கள் வருகின்றன.

ஆதார் கார்டு பல்வேறு மோசடிகளைக் கண்காணிக்கவும் அதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை, இன்னொருவர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்கும், மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.

Aadhaar Card update and Have you linked Ration Card with yr Aadhaar Card

ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இருந்தால் மட்டுமே ரேஷன் உதவிகளைப் பெறமுடியும். இதில் ஆதார் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பான் கார்டு: இதனிடையே, ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது அரசு சார்பாக அறிவுறுத்தப்படுகிறது..

தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டு மூலமாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.. இந்த பலன்களை பெற ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் ஆகும். ரேஷன் கார்டு + ஆதார் கார்டினை இணைக்க ஏற்கனவே, செப்டம்பர் 14ம் தேதி வரையிலும் கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், இந்த கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு: ஆனால், பலமுறை அறிவுறுத்தியும், இன்னமும் நிறைய பேர் ஆதார் கார்டினை இணைக்கவில்லை என்கிறார்கள்.. எனவே, மாவட்ட ரீதியான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், ஈரோடு மாவட்டம் சார்பாக முக்கிய உத்தரவு ஒன்று வந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, கிட்டத்தட்ட 1271 ரேஷன கடைகள் இயங்கி வருகின்றன. அந்த ரேஷன் கடைகளில் சுமார் 7 லட்சத்து 64 ஆயிரத்து 758 ரேஷன் கார்டுகள் உள்ளன.. இந்த ரேஷன் கார்டுகளில் அரிசி கார்டுகள் மொத்தம் 6 லட்சத்து 72 ஆயிரத்து 670 ஆகும்..

சர்க்கரை கார்டுகள்: அதேபோல, அந்தியோதயா அன்ன யோஜனா கார்டுகள் சுமார் 66,235 ஆகும். காவலர் கார்டுகள் சுமார் 1,572, சர்க்கரை கார்டு 18181, முதியோர் அரிசி கார்டு 4794, அன்னபூர்னா அரிசி கார்டு 23, பொருள்கள் வேண்டாம் என 1346 கார்டுகள் இருக்கின்றன. இந்த கார்டுகளில் எல்லாம் சேர்த்து, மொத்தம் 20 லட்சத்து 81 ஆயிரத்து 780 உறுப்பினர்கள் இருக்கின்றன.

அவர்களில் 10,159 பேர் இன்னும் ஆதார் எண்ணை இணைக்காமல் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே, அவர்கள் விரைவில் ஆதார எண்ணை இணைக்க வேண்டும், இல்லாவிட்டால் கார்டுகள் ரத்து செய்யப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும், உத்தரவுகள் இனி பிறப்பிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆதார் கார்டை அப்டேட் செய்வது எப்படி:

- முதலில், UIDAIன் https://myaadhaar.uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிறகு சென்று myaadhaar என்கிற பக்கத்தை தேர்வு செய்ய வேண்டும்.

- பிறகு, "ஆதாரை புதுப்பிக்கவும்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்கள் செல்போன் நம்பருக்கு ஓடிபி எண் வரும்..

- அடுத்து, "புதுப்பிப்பு புள்ளி விவரங்கள் தரவு" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான மாற்றத்தை செய்துகொள்ளலாம்.

- இறுதியாக, URN நம்பரை பயன்படுத்தி, தற்போதுள்ள ஆதார் அப்டேட் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+