உங்கள் ஆதாரில் செல்போன் எண், முகவரியை எளிதாக மாற்றலாம்..ஒரே நிமிடத்தில் சாத்தியம்.. எப்படி தெரியுமா?
சென்னை: பலர் ஆதாரில் செல்போன் எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை மாற்றிக் கொள்வதற்கு இதுவரை இ சேவை மையங்களையும், ஆதாருக்கேன பிரத்யேமாக உள்ள மையங்களுக்கும்தான் சென்று வந்தார்கள். குறிப்பாக செல்போன் எண்ணை மாற்ற வேண்டும் என்றால், ஒரு நாள் அதற்காகவே ஆதார் சேவை மையத்திற்கு சென்று கால்கடுக்க காத்திருந்து மாற்ற வேண்டிய நிலை இருந்தது. ஆனால் ஆதாரில் செல்போன் எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை எந்த நேரமும் எந்த இடத்திலும் இருந்தும் மாற்றும் வகையில் புதிய 'ஆதார்' செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆதாரில் திருத்தம் என்றாலே மக்கள் அலறுகிறார்கள். வெறும் 100 டோக்கன் தருவார்கள்.. சில இடங்களில் 50 டோக்கன் தான் தருவார்கள். அதற்கு காலையில் 8மணிக்கு முன்பே போய் அமர்ந்து காத்திருந்து, வாங்க வேண்டும்.அதன்பிறகு பயோமெட்ரிக் வைக்க மற்றும் செல்போன் எண் மாற்ற லைனில் நிற்க வேண்டும்.

பிறந்த தேதி திருத்தம்
கிட்டத்தட்ட ஒரு நாள் விடுமுறை எடுத்து ஆதார் சேவை மையத்திலேயே காத்துக்கிடக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. அதேபோல் ஆதாரில் திருத்தம் செய்வதும் எளிதானது இல்லை.பிறந்த தேதி, பெயரில் திருத்தம், இனிஷியல் திருத்தம் வேண்டும் என்றால், பிறந்த சான்றிதழையே மாற்ற வேண்டியதிருக்கும். அதற்கு தாசில்தாரை சென்று சந்திக்க வேண்டிய நிலை வரும்.
10ம் வகுப்பு வரை மாற்ற முடியாது
இப்படி பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அப்படி ஒருவேளை மாற்ற முடியாத நிலை வந்தால், குழந்தை 10ம் வகுப்பு முடிக்கும் வரை மாற்ற முடியாது. அப்போது பிறந்த தேதி அல்லது பெயரில் திருத்தம் செய்து, அதன்படி தான் ஆதாரை மாற்ற முடியும். இந்த அளவிற்கு கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ளன. அதேபோல் ஆதார் சேவை மையங்களில் கூட்ட நெரிசல் காரணமாக மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்,
புதிய ஆதார் செயலியில் முகவரி மாற்றலாம்
இந்த சூழலில் ஆதார் சேவைகளை எளிதாகவும், பாதுகாப்பாகவும் அணுகுவதை நோக்கமாகக் கொண்டு இந்த புதிய 'ஆதார்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, உங்கள் குடும்பத்தை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களின் ஆதாரையும் இந்த செயலி மூலம் கட்டுப்படுத்த முடியும். ஆதார் விவரங்களை எளிதாக பகிர முடியும். ஆதார் விவரங்களை யாரெல்லாம் அணுகலாம் என்பதை பயனாளர்களே முடிவு செய்யலாம். அதேபோல, கண் கருவிழி மற்றும் கைரேகை உள்ளிட்ட தகவல்களை எந்தெந்த சேவைகளுக்கு வழங்கலாம் என்பதையும் பயனர்கள் முடிவு செய்ய முடியும்.
ஆதார் ஆப்
புதிய ஆப் மூலமாக ஆதாரில் செல்போன் எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை எந்த நேரத்திலும் இந்த செயலி மூலம் மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம், செல்போன் எண், முகவரி மாற்றத்திற்காக ஆதார் சேவை மையத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் இனி இருக்காது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications