ஜஸ்ட் 10 நிமிஷ வேலைதான்.. மின் இணைப்புடன் ஆதார் நம்பரையும் இணைக்க.. இப்படி பண்ணுங்க மக்களே..!
மின் இணைப்புடன் ஆதார் நம்பர் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் இன்று முதல் நடக்கிறது
சென்னை: மின் இணைப்புடன், ஆதார் நம்பரை எப்படி இணைப்பது என்பதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.. இந்த முறையை பின்பற்றி 10 நிமிஷத்தில் நம்பரை இணைத்துவிடலாம் என்கிறார்கள்.
தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.. அதிலும், விவசாயம் மற்ற பிற தொழில்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது.
இந்தநிலையில், தமிழகத்தில் அனைத்து பயனர்களும் மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது..

வெப்சைட்கள்
மின்சாரம் முறைகேட்டை தடுப்பதற்காக, மின் இணைப்புடன், ஆதார் நம்பரையும் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. எனவே, மின் இணைப்புடன், ஆதார் நம்பரையும் இணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இண்டர் நெட் மையங்களில், ஆதார் நம்பரை இணைப்பதற்கான பணிகள் செய்து தரப்படுகிறது என்பதால், பொதுமக்கள், நெட் சென்டரை தேடிச்சென்று இணைத்து வருகிறார்கள்... அதேபோல, வெப்சைட்கள் மூலமாகவும் நம்பரை இணைத்து விட முடிகிறது.. ஆதார் எண்ணை இணைத்தவுடன், அந்தந்த போன்களுக்கு மெசேஜ் வந்துவிடும்...

ஆன்லைன்
எனினும் பலருக்கு ஆன்லைனில் எப்படி இணைப்பது என தெரியாமல் உள்ளதால், அவர்களுக்கான எளிய வழிமுறைகள் சொல்லப்பட்டு வருகின்றன.. கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றி ஆன்லைனில், ஆதார் நம்பரை இணைத்து கொள்ளலாம். ஆன்லைனில் அரசின் (TANGEDCO) இணையதளத்தில் ஆதார் எண் இணைப்பது குறித்து பார்க்கலாம். https://www.tnebltd.gov.in/adharupload/ என்ற அதிகாரப்பூர்வ லிங்க்-ஐ பயன்படுத்தி ஆன்லைனில் ஆதார் எண் இணைக்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை
நம்பரை இப்படி இணைப்பது எளிது என்றாலும், பலபேரால் அந்த பணியை எளிதாக செய்ய முடிவதில்லை.. அதனால், இதனை கருத்தில் கொண்டு தமிழக மின்சார வாரியம் சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல், தமிழகம் முழுவதிலும் உள்ள 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் இந்த முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.. பண்டிகை நாட்களை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இணைப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் முகாம்கள் நடத்தப்படும்.

ஸ்பெஷல் கேம்ப்
இன்று காலை 10 மணி முதல் மாலை 5.15 மணி வரை மின்கட்டண அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதற்காக, 2,811 மின்வாரிய பிரிவு மையங்களிலும் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது மின் பயனீட்டு அட்டை மற்றும் ஆதார் அட்டையை நேரடியாக கொண்டு சென்று, இணைத்துக் கொள்ளலாம். அரசு விடுமுறைகளை தவிர்த்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் செயல்படும். இந்த சிறப்பு முகாம் மூலம் ஆதாரை இணைக்க 34 நாட்கள் அவகாசம் கிடைத்துள்ளது மக்களுக்கு நிம்மதியை தந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications