வீடுகளுக்கு டிஜிட்டல் ஐடி! ஆதார் எண் போல தனி அடையாள எண்.. மத்திய அரசின் மெகா பிளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதார் போன்று இனி ஒவ்வொரு வீட்டுக்கும் டிஜிட்டல் முகவரியை கட்டமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புது முயற்சியை மத்திய அரசு எடுத்துள்ளது. ஆதார் கார்டு போன்று ஒவ்வொரு வீட்டிற்கும் டிஜிட்டல் முகவரியை கட்டமைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. முழுக்க முழுக்க ஜிபிஎஸ் அடிப்படையில் இந்த அடையாள எண் உருவாக்கப்படுகிறது.

நாட்டில் உள்ள அனைவருக்கும் தற்போது ஆதார் என்ற அடையாள அட்டை அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அரசின் நலத்திட்டங்களை ஆதார் எண்ணை வைத்தே பெற முடியும் என்ற அளவிற்கு தற்போது ஆதார் என்பது அத்தியாவசியமாகிவிட்டது. ஆதார் கார்டு மட்டும் இன்றி தற்போது மக்கள் வைத்து இருக்கும் பெரும்பாலான ஆவணங்களும் டிஜிட்டல் மயமாகி வருகின்றன.

aadhaar-for-your-homes-understanding-india-s-new-digital-address-initiative

ஆதார் கார்டு போன்று ஒவ்வொரு வீட்டிற்கும் டிஜிட்டல் முகவரியை கட்டமைக்கும் முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதாவது, ஆதார் போன்று இனி ஒவ்வொரு வீட்டுக்கும் டிஜிட்டல் முகவரியை கட்டமைக்க வேண்டும் என்பது தான் இத்திட்டத்தின் நோக்கம். முழுக்க முழுக்க ஜிபிஎஸ் அடிப்படையில் இந்த அடையாள எண் உருவாக்கப்படுகிறது.

வீடுகள் மற்றும் இடங்களை துல்லியமாகவும், விரைவாகவும் கண்டறிய முடியும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. டிஜிபின் என்று அழைக்கப்படும் இந்த அடையாள எண்ணில் 12 இலக்கங்கள் இருக்கும். 53 ஆண்டுகளாக அஞ்சல்துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் பின் கோடு நம்பருக்கு அஞ்சலக அடையாள எண்ணின் மறுவடிவமாக இந்த டிஜிட்டல் ஐடி இருக்கும் என்று தெரிகிறது.

அதாவது அஞ்சல் புதிய டிஜிட்டல் அமைப்பின் மூலம் வழக்கமான குறியீடுகள் மாதிரி இன்றி, படங்களை பயன்படுத்தி சரியான இருப்பிடத்தை காண முடியும். முகவரிகள் சரிவர இல்லாத கிராமங்கள், காடுகள், மலைப்பகுதிகள் போன்றவற்றில் இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதே அதிகாரிகள் கூறும் கருத்தாக உள்ளது. இந்த டிஜிட்டல் எண்ணை வைத்து எந்த ஒரு வீடு அல்லது நிலத்தை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

பயனர்களின் ஒப்புதலுடன் தான் அவர்களுடைய முகவரி விவரங்கள் பிறருக்கு தெரியபடுத்தப்படும். இந்த டிஜிட்டல் தகவல்கள் மக்களின் முகவரியை பாதுகாப்பான முறையில் அணுக அனுமதிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக அஞ்சல் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, "தற்போது இத்திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது. இது நடைமுறைக்கு வந்த பிறகு தபால்களை வழங்குவது மிகவும் எளிதாகி விடும். இதில் வீட்டு முகவரி மற்றும் பெயர்களை ஒரு முறை கொடுத்தால் போதும், அவரின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட வேண்டிய தபால் உள்ளிட்டவைகள் அனைத்தும் அனுப்பப்பட்டு விடும் என தெரிவித்தார்.

இந்த புதிய திட்டம் நடைமுறைக்கு வந்ததும் தற்போது அன்றாட வாழ்வில் ஆதார் கார்டு மற்றும் யு.பி.ஐ பண பரிவர்த்தனை எவ்வளவு முக்கியமாக இருக்கிறதோ? அதே போல முகவரி விவரங்களுக்கான முக்கிய அமைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர அரசின் நலத் திட்டங்கள், பயன்கள் சம்பந்தப்பட்ட நுகர்வோர்களுக்கு முறையாக சென்று விட்டதா? என்பதையும் அறிய முடியும்.

அரசின் டெலிவரி சேவைகள் விரைவாகவும் துல்லியமாகவும் ஒரு முகவரியை அடையாளம் கண்டுபிடிக்க முடியும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளது. இந்த வரைவு வடிவம் தயாரிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இன்னும், ஒரு சில வாரங்களில் பொதுமக்களின் கருத்துக்களை அறிய இந்த வரைவு விவரம் பொதுவெளியில் பகிரப்படும் என்று சொல்லப்படுகிறது. பிரதமர் அலுவலகம் இதற்கான பணிகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டத்தின் முழு வடிவமும் தயாராகிவிடும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+