நிலப்பட்டா + ஆதார் கார்ட்.. அதைவிடுங்க.. ஆன்லைனில் வெறும் 5 நிமிஷத்தில் இ பான் பெற முடியுமா.. ஈஸிதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.. அதனால்தான், அனைத்து துறைகளிலுமே இந்த கார்டுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

ஆதார் கார்டு பல்வேறு மோசடிகளைக் கண்காணிக்கவும் அதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை, இன்னொருவர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்கும், மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.

aadhaar lined with land patta and Do you know how to get e pan card through website

தற்போது பதிவுத்துறையிலும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. அதாவது, சமீபகாலமாகவே, நிலஅபகரிப்பு மோசடிகள் ஆங்காங்கே நிறைய நடந்துவருவதால், இவைகளை களைய வேண்டியது அரசின் கடமையாக உள்ளது.

ஆவணங்கள்: அதிலும், வெறும் ஆவணங்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஆள்மாறாட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது, ஒருவருக்கு சொந்தமான நிலத்தில், போலி ஆவணங்களை வைத்து, சட்டப்பூர்வ நில உரிமையாளராகிவிடுவது போன்றவைகள் நடக்க வாய்ப்புள்ளது.

அதனால்தான், பட்டாவில் இடம்பெறும் விவரங்களில் உரிமையாளரின் அடையாளத்தை உறுதி செய்ய போதுமான ஆவணங்கள் இல்லை என்பதால் பட்டா உள்ளிட்ட ஆவணங்களில் ஆதார் நம்பரை இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

பட்டா + ஆதார்: இப்படி பட்டாவில் ஆதாரை இணைப்பதால், ஒருவர் பெயரில் எத்தனை சொத்துகள் உள்ளன? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.. நில அபகரிப்பு போன்ற குற்றங்களையும் இதன்மூலம் தடுக்க முடியும் என்பதாலேயே பொதுமக்களின் நன்மை கருதி அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதுபோலவே, ஆதாரை போல மிக முக்கியமானது, பான் கார்டு ஆகும்.. நாம் வைத்திருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்று இதுவாகும்.. வங்கி தொடர்பான எல்லா சேவைகளுக்கும் இந்த கார்டுதான் உதவுகின்றன.. காரணம், நம்முடைய அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று எல்லாமே இந்த பான் கார்டில்தான் இணைக்கப்பட்டு இருக்கும்.
இந்த அளவுக்கு முக்கியத்துவத்தை பெற்றுள்ளதுதான் இந்த பான்கார்டுகள்.. ஒருவேளை உங்கள் பான்கார்டு தொலைந்து விட்டால், திரும்ப பெறுவது எப்படி தெரியுமா?

ஆன்லைன்: ஆன்லைனிலேயே இதற்கு வழி உள்ளது.. வருமானவரித்துறை புதிதாக இதற்கொரு வசதியை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது.. இனி பான் கார்டு தேவைப்படுவோருக்கு இ-பான் கார்டு வழங்கப்படுகிறது. இ-பான் என்பது வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட டிஜிட்டல் பான் அட்டை ஆகும். கீழ்க்கண்ட முறைகளை பயன்படுத்தி, தொலைந்த பான் கார்டை பெற்றுக் கொள்ளலாம்.
அதாவது, ஆதார் கார்டு வர தாமதமானால் ஆன்லைன் மூலமாக இ ஆதார் கார்டு பெறலாம். அதாவது ஆதார் கார்டை பயன்படுத்தி இ-பான் (e-PAN) எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.. இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. இந்த பான் கார்டு டிஜிட்டல் கையொப்பமிட்டதாகும்.

e-PAN பெற எளிய வழிமுறைகள் இதுதான்:

- https://www.incometax.gov.in/iec/foportal என்ற வெப்சைட்டிற்குள் நுழைந்து, "உடனடி இ-பான்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

- e-PAN பக்கத்தில், Get New e-PAN என்பதையும் கிளிக் செய்ய வேண்டும்.

- இப்போது, 12 இலக்க ஆதார் நம்பரை அதில் பதிவிட்டு, "நான் உறுதிப்படுத்துகிறேன்" (I confirm) என்ற ஆப்ஷனை தேர்வு செய்து "Continue" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

- TP சரிபார்ப்பு பக்கத்தில், "நான் ஒப்புதல் விதிமுறைகளைப் படித்துவிட்டேன், மேலும் தொடர ஒப்புக்கொள்கிறேன்" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

- OTP சரிபார்ப்பு பக்கத்தில், ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பரில் பெறப்பட்ட 6 இலக்க ஓடிபி நம்பரை அதில் பதிவிட்டு, "UIDAI" உடன் ஆதார் விவரங்களை சரிபார்க்க என்பதை தேர்வு செய்து, "தொடரவும்" என்பதை கிளிக் செய்ய வேண்டும்

- பிறகு "ஆதார் விவரங்களை சரிபார்க்கவும்" பக்கத்தில் கிளிக் செய்து, "நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்" என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுத்து, "தொடரவும்" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

- கடைசியாக அனைத்தையும் சமர்ப்பித்த பிறகு, ஒப்புகை எண்ணுடன் (Acknowledgement Number) செய்தி காட்டப்படும். இப்போது நீங்கள் e-PAN டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+