Aadhaar கார்டில் மெகா அப்டேட்.. இனி அலைச்சல் வேண்டாம்! உட்கார்ந்த இடத்திலிருந்தே இனி திருத்தலாம் !
சென்னை: இந்தியாவில் மிக முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் மாறிவிட்டது. இந்த நிலையில் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற ஆதார் தகவல்களை மாற்றம் செய்வதற்கு சேவை மையங்களை நாடிச் செல்ல வேண்டிய நிலை இதுவரை இருந்தது. இனி அதுபோன்று பொதுமக்கள் அரசு அலுவலகங்களைத் தேடி அலைய தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே தங்கள் ஆதார் தகவல்களை மாற்றம் செய்யும் வகையில் புதிய செயலி ஒன்றை UIDAI அறிமுகப்பட்டுள்ளது. இந்த செயலி இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இன்று ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாகிவிட்டது. வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் அரசு நலத்திட்டங்கள், வருமான வரித்துறை செயல்முறைகள் வரை ஆதார் அட்டை அவசியமான ஒன்றாகிவிட்டது.
ஆனால் இதில் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற தகவல்களில் தவறுகள் ஏற்பட்டால், மக்கள் நேரில் ஆதார் மையங்களுக்கு சென்று திருத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் நேர விரயம் மற்றும் தேவையற்ற தாமதங்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன.

e-Aadhaar செயலி
இந்த சிக்கலை தீர்க்க UIDAI (Unique Identification Authority of India) ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. அந்த வகையில், ஆதாரை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியாக . "e-Aadhaar App" எனப்படும் இந்த புதிய செயலி அறிமுகமாகியுள்ளது. இந்த செயலி மூலம், ஆதார் தொடர்பான தகவல்களை மக்கள் தாங்களே வீட்டிலிருந்தபடியே திருத்த முடியும். குறிப்பாக பிறந்த தேதி, பெயர், பெயர்களில் எழுத்துப்பிழை, முகவரி, மொபைல் எண் போன்ற முக்கிய விவரங்களை இனி ஆதார் மையத்திற்கு செல்லாமல் மொபைல் மூலமாகவே புதுப்பிக்க முடியும்.
ஆதார் தகவல் திருத்தம்
இந்த e-Aadhaar செயலி Android மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கும். சாதாரண பயனாளிகளும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் இதை வடிவமைக்க UIDAI முயற்சி எடுத்துள்ளது. இதன் மூலம் ஆதார் மையங்களில் கூடுதல் நெரிசல் குறையும், மக்களின் நேரமும் சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
UIDAI
இதுதொடர்பாக UIDAI அதிகாரிகள் கூறும் போது, புதிய e-Aadhaar செயலியில் AI (Artificial Intelligence) தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முகஅடையாளம் (Face Recognition) மற்றும் கைரேகை (Biometric Verification) வழியாக பயனாளரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படும். இதனால் தரவு பாதுகாப்பு மேலும் வலுப்பெறும், போலி ஆதார் மோசடிகளைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது.
UIDAI பெயர் திருத்தம்
இந்த செயலி இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தற்போது UIDAI-க்கு mAadhaar என்ற செயலி உள்ளது. அதில் ஆதார் தகவல்களைப் பார்க்கவும், டிஜிட்டல் வடிவில் கார்டுகளை சேமிக்கவும் முடியும். ஆனால் அதில் தகவல் திருத்த வசதி இல்லை. புதிய e-Aadhaar செயலி இதை சரிசெய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக இணையதள வழி சேவையுடன் கூடியதாக இருக்கும். என UIDAI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிஜிட்டல் இந்தியா
இந்த முயற்சி 'டிஜிட்டல் இந்தியா' (Digital India) திட்டத்தின் முக்கியமான ஒரு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இது பொதுமக்களுக்கு அதிக வசதியையும், ஆதார் அமைப்பில் பாதுகாப்பான மாற்றத்தையும் அளிக்கும். எனவே இனி நாட்கணக்கில் ஆதார் திருத்தத்துக்காக மக்கள் அலைய தேவையில்லை என்கின்றனர் அதிகாரிகள்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications