ஒரே கார்டு ஓஹோன்னு வாழ்க்கை.. ஆதார் கார்டை வைத்து மத்திய அரசு மிகப்பெரிய பிளான்.. இனி எல்லாம் ஈஸி

இந்த புதிய வசதி தொடர்பாக மத்திய அரசு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதார் கார்டில் விலாசம் மாற்றினால் மற்ற கார்டுகளிலும் விலாசம் மாறுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறதாம்.

ஆதார்கார்டு இப்போது இந்தியாவில் அடிப்படை அடையாள அட்டையாக மாறிவிட்டது. இந்தியாவில் மிக முக்கியமான அடையாள அட்டையாக இந்த ஆதார் அட்டை திகழ்ந்து வருகிறது. பல துறைகளில் சேவைகளை பெற ஆதார் கார்டு அவசியம் ஆகிவிட்டது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.

Aadhaar News: Union government is planning for common KYC change through single card

மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியம் ஆகி உள்ளது. சமீபத்தில் கூட பான் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. பான் கார்டு என்பது நம்முடைய நிரந்தர கணக்கு எண் ஆகும். நமது அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று அனைத்துடனும் இந்த எண் இணைக்கப்பட்டு இருக்கும். லோன் எடுக்க, வருமான வரி தாக்கல் செய்வது, வங்கியில் அதிக அளவு பண பரிவர்த்தனை செய்வது போன்ற செயல்களுக்கு பான் கார்டு அவசியம். நம் வரவு செலவு அனைத்தும் இதன் மூலமே கண்காணிக்கப்படுகிறது. இதில் தற்போது ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியம் ஆகிறது.

இந்த நிலையில்தான் ஒருவேளை ஆதார் அட்டையில் இனி மாற்றங்கள் செய்தால் அது மற்ற அட்டைகளில் எதிரொலிக்கும் வசதியை ஏற்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறதாம். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இதற்கான ஆலோசனைகளை செய்து வருகிறதாம். தற்போது இருக்கும் முறைப்படி ஆதார் அட்டையில் விலாசம் மாற்றினால் அது மட்டுமே மாறும்.

மற்ற இடங்களில் மாறாது. அதுவே ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளில் விலாசம் மாற்ற வேண்டும் என்றால் தனி தனியாக செல்ல வேண்டும். இதற்காக தனி தனி அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும். இது பெரிய அலைச்சலை கொடுக்கும் வேலை ஆகும். ஒவ்வொரு முறையும் விலாசம் மாறும் போது இந்த அலுவலகங்களுக்கு எல்லாம் சென்று விலாசம் மாற்றுவது இயலாத காரியம். இது அதிக நேரம் எடுக்க கூடியது. சில நேரங்களில் நாம் மாற்றும் விலாசம் அப்டேட் ஆக கால தாமதம் எடுக்கும். இந்த நிலையில்தான் ஆதார் கார்டில் விலாசம் மாற்றினால் மற்ற கார்டுகளிலும் விலாசம் மாறுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறதாம்.

இது முதல் கட்ட திட்டம் மட்டுமே. இப்போதுதான் பல்வேறு துறை வல்லுனர்களுடன் ஆலோசனைகளை செய்து வருகின்றனர். ரேஷன், பாஸ்போர்ட், தேர்தல் ஆணையம் என்று பல துறைகளுடன் இணைந்து ஆலோசனை செய்ய வேண்டும் என்பதால் இதை அமலுக்கு கொண்டு வர பல மாதங்கள் ஆகலாம். ஆனால் அமலுக்கு வந்த பின், ஆதார் விலாசத்தை மாற்றுவதன் மூலம் அணைத்து அட்டைகளிலும் எளிதாக விலாசத்தை மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் இந்த சேவைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த புதிய வழிமுறை மத்திய அரசு கொண்டு வரும் ஆலோசனையில் உள்ளது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+