Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆதார் அட்டை இருக்குல்ல.. அதுல ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கா? உங்க பெயர் திருத்தம் செய்யணுமா? ரொம்ப ஈஸி

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்க ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா? எழுத்துப்பிழை என்றில்லாமல் முழு பெயரையும் மாற்ற முடியுமா? என்பதை பார்க்கலாம்.

ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளை பெறும் முறைகளையும் எளிமையாக்கியுள்ளது மத்திய அரசு. அந்த அளவுக்கு ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது.

ஆதார் கார்டு பயன்கள்: இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல.. மக்கள் நலத் திட்டங்களில் உதவிகளை பெறுவதற்குக்கும் ஆதார் அவசியம். சிம் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆதாரை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ள நிலையில், ரேஷன் கார்டிலும் ஆதாரை இணைத்தாக வேண்டும்.

Aadhar Card Corrections and Do you know how to correct the Name in Aadhaar card

ஆதார் கார்டு பல்வேறு மோசடிகளைக் கண்காணிக்கவும் அதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை, இன்னொருவர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்கும், மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இருந்தால் மட்டுமே ரேஷன் உதவிகளைப் பெறமுடியும். இதில் ஆதார் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஒரே நாடு ஒரே ரேஷன்: ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் வாங்கிக் கொள்ளலாம்... அதுவும் இல்லாமல், 1000 ரூபாய் உரிமைத்தொகையை வழங்க திமுக அரசு தயாராகி வருகிறது.. மகளிர் உரிமைத்தொகை மட்டுமல்லாமல் பொங்கல் பரிசுத்தொகுப்பு போன்ற உதவிகளும் இந்த ரேஷன் கார்டுகள் மூலம்தான் கிடைக்கின்றன.

இணைப்பு கட்டாயம்: அதனால்தான், ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஒருவேளை திருத்தங்கள் ஏதாவது இந்த கார்டில் நீங்கள் செய்யவேண்டுமானால், எளிதாக செய்துவிடலாம்.. குறிப்பாக, உங்களுடைய ஆதார் கார்டில் பிறந்த தேதியை மாற்ற வேண்டுமானாலும், அதையும் ஈஸியாக செய்துவிடலாம்.

ஒருவேளை சிறிய பிழைத்திருத்தமாக இல்லாமல், முழு பெயரே மாறியிருக்கும் சூழலில் நேரடியாகவே ஆதார் மையத்திற்கு சென்று பெயர் திருத்தம் செய்து கொள்ளலாம்.. எனினும் இதற்காக பக்கத்திலுள்ள ஆதார் மையத்திற்கே சென்று, அங்கிருக்கும் அதிகாரியிடம் பெயர் திருத்தம் செய்வதற்கான செயல்முறையைக் கேட்டு அதன்படி பெயர் திருத்தம் செய்து கொள்ளலாம். அப்படி போகும்போது, பெயர் திருத்திற்கு தேவையான ஆவணங்களை உடன் எடுத்து செல்ல வேண்டும்.

ஆவணங்கள்: ஆனால், அதற்கு இதோ இந்த முக்கிய ஆவணங்கள் தேவைப்படும். பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், பொதுத் துறை நிறுவனங்கள் வழங்கிய சேவை புகைப்பட அடையாள அட்டை, அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டை, கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட சரிபார்ப்பு, புகைப்பட அடையாள அட்டை, 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை, ஆயுத உரிமம், புகைப்படம் போன்றவை இருக்க வேண்டும்.

அத்துடன், தாசில்தார் அல்லது கெஜட்டட் அதிகாரியால் வழங்கப்பட்ட போட்டோவுடன் கூடிய அடையாளச் சான்றிதழ். மற்றும், எம்எல்ஏ/எம்எல்சி/எம்பி/நகராட்சி கவுன்சிலர் மூலமாக ஒரு லெட்டர்ஹெட்டில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் உள்ளிட்டவையும் கட்டாயம் தேவை

இப்போது, முதலில் ஆதாரில் உள்ள பெயரில் எதுவும் பிழையில்லாமல் இருக்க வேண்டும். முகவரி, பிறந்த தேதி என பல விவரங்களும் சரியாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிடில், இதனை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணையத்திலேயே மாற்றிக் கொள்ளலாம். ஆனால், புகைப்படம், மொபைல் நம்பரை பதிவு செய்ய, அருகிலுள்ள ஆதார் சேவை மையத்திற்கு தான் செல்ல வேண்டும்.

அப்டேட்: இவ்வாறு மாற்றம் செய்யப்படுவதும் ஒரு சில முறையே அப்டேட் செய்து கொள்ளலாம். ஆதார் கார்டில் உள்ள பிறந்த தேதியினை ஒரு முறைக்கு மேல் அப்டேட் செய்ய முடியாது. அதேபோல ஆதார் கார்டில் உள்ள பெயரை இருமுறை அப்டேட் செய்யலாம். இதேபோல உங்களின் பாலினத்தினையும் ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும்.

உங்கள் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை ஆன்லைனிலேயே அல்லது ஆதார் மையத்திலேயே சென்றும் அப்டேட் செய்து கொள்ளலாம். சில குறிப்பிட்ட விவரங்களை மட்டுமே ஆன்லைனில் அப்டேட் செய்து கொள்ளலாம். இதில் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட சில விவரங்களை மட்டும் ஆன்லைனில் அப்டேட் செய்து கொள்ளலாம்.

12 இலக்க ஆதார் நம்பர்: இப்போது, ஆதார் அப்டேட் இணையத்திற்கு சென்று, proceed to Update என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதற்கு அடுத்து 12 இலக்க ஆதார் நம்பரினை பதிவிட வேண்டும். அதன் பிறகு கேப்ட்சா எழுத்தினை பதிவிட வேண்டும். அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அந்த ஓடிபியினை பதிவு செய்ய வேண்டும். இதனை ஆதார் மையத்திற்கும் சென்றும் உரிய ஆவணங்களை கொடுத்து நாம் அப்டேட் செய்து கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+