ஆதார் அட்டையை இனி யாரும் "ஆட்டைய" போட முடியாது.. ஆதார் கார்டில் எத்தனை போன் நம்பர் இருக்கு? ஈஸி வழி
சென்னை: உங்க ஆதார் கார்டில் எத்தனை செல்போன் நம்பர்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை உங்களால் அறிய முடியுமா? திருமணமான பெண்கள், தனது தந்தையின் பெயரை நீக்கி, கணவனின் பெயரை இணைப்பது எப்படி தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
ஆவணங்கள் என்றாலே அதை நாம் எந்நேரமும் பத்திரப்படுத்த வேண்டியதாயிருக்கிறது.. எங்கே செல்வதானாலும், அவைகளை பாதுகாப்புடன் கொண்டு சென்று, வீடு திரும்ப வேண்டுவது அவசியமாகிறது..

அடையாள அட்டைகளை கூட பாக்கெட்டில் எடுத்து செல்ல வேண்டியிருந்தது... ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு மத்திய, மாநில அரசுகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன... முக்கிய ஆவணங்களை சாஃப்ட் காப்பி வடிவில் செல்போனிலேயே வைத்துக்கொள்ள முடியும்.
ஆதார் அட்டை , பான் கார்டு , டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்களை இப்போது ஸ்மார்ட்போனிலேயே பதிவிறக்கம் செய்து எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
முறைகேடுகள்: ஆதார் கார்டை பொறுத்தவரை மிக மிக முக்கிய ஆவணமாக மாறிவிட்டது. வங்கி பணப் பரிவர்த்தனை என்றாலும் ஆதார்தேவையாக இருக்கிறது.. 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை முதல் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது என அனைத்து விஷயங்களுக்கும் ஆதார் கார்டு முக்கியமாக உள்ளது. ஆதார் அவசியம்.
எனினும், நிறைய முறைகேடுகள் இந்த ஆதார் கார்டை வைத்து நடப்பதால்தான், பான் கார்டுடன் ஆதார் கார்டையும் கட்டாயம் இணைக்க சொல்லி அறிவுறுத்துகிறது மத்திய அரசு.
போன் நம்பர்கள்: இந்த ஆதார் கார்டில் ஒன்றுக்கு மேற்பட்ட செல்போன்கள் நம்பர்கள் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். காரணம், ஒருவருடைய ஆதார் கார்டை, இன்னொருவர் மிஸ்யூஸ் செய்யவும் வாய்ப்புள்ளது. அதனால், ஆதார் கார்டில் என்னென்ன போன் நம்பர்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்துகொள்ள, tafcop.dgtelecom.gov.in என்ற வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும்.
அங்கே உங்களுடைய செல்போன நம்பரை பதிவு செய்தால், உடனே ஓடிபி நம்பர் அனுப்பப்படும். அந்த நம்பரை, அதில் பதிவிட்டு, உள்ளே செல்ல வேண்டும். அங்கே உங்களுடைய ஆதார் கார்டில் எத்தனை மொபைல் நம்பர்கள் இணைக்கப்பட்டுள்ளன என்ற விவரத்தை தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் பயன்படுத்தாத செல்நம்பரோ அல்லது உங்களுக்கு தெரியாத செல்நம்பரோ இருந்தால் அதை டெலீட் செய்துவிடலாம்.
திருமணமான பெண்கள்: ஒருவேளை, திருமணமான பெண்கள், தங்கள் தந்தையின் பெயருக்கு பதில், கணவரின் பெயரை மாற்ற வேண்டுமானாலும் அதற்கும் ஒரு வழி உள்ளது.. இதையும் ஆன்லைனிலேயே நீங்கள் செய்யலாம். இதற்கு 50 ரூபாய் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
வழிமுறைகள்: திருமண சான்றிதழை ஸ்கேன் செய்தோ அல்லது போட்டோவாக தெளிவாக எடுத்து கையில் வைத்து கொள்ள வேண்டும். பிறகு, https://myaadhaar.uidai.gov.in/ என்ற வெப்சைட்டிற்குள் சென்று ஆதார் திருத்தம் என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு, உங்கள் ஆதார் நம்பரை பதிவிட வேண்டும். இப்போது, உங்கள் ஆதார் கார்டில் இணைந்துள்ள போனுக்கு, OTP நம்பர் வரும். அந்த நம்பரை அதில் பதிவிட்டு, "திருத்தப் பக்கத்திற்குள் " செல்ல வேண்டும்.
அங்கே உங்களது பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், வீடு முகவரி போன்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கும். அதில் நீங்கள் எதை மாற்ற வேண்டுமோ அந்த தகவல் இடம்பெற்றிருக்கின்ற இடத்தில் "பெயர் மாற்றம்" என்று தனது, தந்தை பெயருக்குப் பதில் கணவரின் பெயரை மாற்ற வேண்டும்.
50 ரூபாய் கட்டணம்: இப்போது ஏற்கனவே தயாராக கையில் வைத்திருக்கும், திருமண சான்றிதழ் போட்டோ அல்லது ஸ்கேனை பதிவேற்ற வேண்டும். அனைத்து தகவலும் சரிசெய்தபிறகு, ரூ.50 கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்த வேண்டும். இறுதியாக Submit என்ற ஆப்ஷனை தந்ததும், உங்களுக்குப் பதிவு எண் ஒன்று தோன்றும். அதனை மறக்காமல் குறித்துக்கொள்ள வேண்டும்.
சில நாட்களுக்கு பிறகு, உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு அப்டேட் செய்யப்பட்டுவிடும். பெயர் திருத்தம் செய்தபிறகு, அது உங்கள் செல்போனுக்கு மெசேஜ்ஜில் வந்துவிடும். மேலும் 90 நாட்களில் திருத்தம் செய்யப்பட்ட ஆதார் கார்டு உங்களின் வீட்டு முகவரிக்கு தபால் மூலமாகவும் வந்துவிடும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications