"முடிஞ்சது".. உங்க ஆதார் அட்டையில் இனி ஒருத்தரும் "ஆட்டைய" போட முடியாது.. இதை முதல்ல செய்யுங்க..!!
சென்னை: உங்க ஆதார் கார்டில் உள்ள விவரங்களை எப்படி தெரிந்து கொள்வது தெரியுமா? அதற்கும் ஒரு வழியிருக்கு பாருங்கள்.. !!
ஆவணங்கள் என்றாலே அதை நாம் எந்நேரமும் பத்திரப்படுத்த வேண்டியதாயிருக்கிறது.. எங்கே செல்வதானாலும், அவைகளை பாதுகாப்புடன் கொண்டு சென்று, வீடு திரும்ப வேண்டியது அவசியமாகிறது..
அடையாள அட்டைகளை கூட பாக்கெட்டில் எடுத்து செல்ல வேண்டியிருந்தது... ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு மத்திய, மாநில அரசுகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன... முக்கிய ஆவணங்களை சாஃப்ட் காப்பி வடிவில் செல்போனிலேயே வைத்துக்கொள்ள முடியும்.

ஆவணங்கள்: அதாவது, ஆவணங்களை, டிஜிட்டல் வடிவத்தில் இருப்பதை அரசே அனுமதி அளிக்கிறது... ஆனால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வடிவத்திலும் அவைகள் இருக்க வேண்டும்... ஆதார் அட்டை , பான் கார்டு , டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்களை இப்போது ஸ்மார்ட்போனிலேயே பதிவிறக்கம் செய்து எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். மேலும், ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளை பெறும் முறைகளையும் எளிமையாக்கியுள்ளது மத்திய அரசு..
டிஜிட்டல் லாக்கர்: தற்போதைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலமாகவே அரசின் ஆவணங்களை டவுன்லோடு செய்து மொபைல் போனில் சேமித்து வைத்துக்கொள்வதற்கான வசதிகளையும் சமீபத்தில் அறிவித்தது.. இதற்கு டிஜிட்டல் லாக்கர் என்ற கணக்கு வைத்திருக்க வேண்டியது முக்கியமாகும்.. ஒருவேளை, உங்களிடம் டிஜிட்டல் லாக்கர் கணக்கு இல்லையெனில் Digital Locker App அல்லது இதற்கான இணையதளத்தை பயன்படுத்தி டிஜிட்டல் லாக்கர் கணக்கை உருவாக்கி கொள்ள வேண்டும்.
அதேபோல, ஆதார் அட்டையில் நம்முடைய பெயர், முகவரி உள்ளிட்ட சுயவிவரங்கள் இடம்பெற்று இருக்கும்.. ஆனால், இப்போது, போலியான ஆதார் கார்டுகள் பயன்பாடு அதிகரித்து விட்டதால், நம்முடைய ஆதார் அட்டையை அடிக்கடி சரிப்பார்த்து கொள்ள வேண்டி உள்ளது. அந்தவகையில், QR CODE-வைத்து, ஸ்கேன் செய்து நம்முடைய அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.. ஆதார் கார்டில் உள்ள QR CODE - ஐ எப்படி ஸ்கேன் செய்வது?

முதலில் mAadhaar என்ற செயலியை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் QR கோட் ஸ்கேனரை கிளிக் செய்து உங்களது ஆதார் அட்டையில் உள்ள QR CODE -ஐ ஸ்கேன் செய்யவும். அடுத்ததாக திரையில் உங்களது ஆதார் கார்டு விவரங்கள் முழுமையாக காண்பிக்கப்படும். அதில் நீங்கள் சரிபார்த்து கொள்ளலாம்.
ஒருவேளை, ஏதேனும் தவறுகள் இருந்தால், அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக அதனை மாற்றிக்கொள்ளலாம்.
பயோமெட்ரிக் விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தாலும், ஆதார் பதிவு மையத்திற்கு சென்று மாற்றிக் கொள்ளலாம். இப்படி சரிபார்த்து கொள்வதன்மூலம் போலி ஆதார் கார்டுகள் புழக்கத்தையும் தடுக்கமுடியும்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications