அமித்ஷா பற்றி பேசியதால்.. சொந்த அமைச்சர் பேச்சையை நீக்க சொன்ன ஆதவ் அர்ஜுனா!
சென்னை: தமிழக சட்டசபையில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து அமைச்சர் வன்னி அரசு பேசிய கருத்துக்களை, அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சபாநாயகரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இது தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக சட்டசபையில் தொகுதி மறுவரையறை குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது பாமக எம்எல்ஏ கணேஷ் குமார் பேசுகையில், நாடாளுமன்றத்தில் நியாயமான தொகுதி மறுவரையறை குறித்து பேசிய காங்கிராச், தற்போது தொகுதி மறுவரையறை கூடாது என்ற நிலைப்பாட்டுக்கு மாறியுள்ளது.

தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் வராது என்று அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், தொகுதி மறுவரையறை மசோதாவில் இல்லாதவற்றை அமித்ஷா பேசுகிறார். இல்லாததை லோக்சபாவில் பேசுவது ஏமாற்று வேலை. மக்களுக்கு எதிரான பாஜகவின் அத்தனை திட்டங்களுக்கு எதிராகவும் விசிக பேசி ஒருக்கிறது.
பாமக நண்பர்கள் ராமதாஸை காப்பாற்றுவதை விடவும் பிரதம்ர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை காப்பாற்றுவதில் தான் குறியாக உள்ளீர்கள் என்றார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அமைச்சர் வன்னி அரசு, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா குறித்து பேசிய கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து எடுத்துவிடலாம். எந்தக் கட்சியைப் பற்றியும் நாம் பேச வேண்டாம்.
இது மாநில உரிமை சார்ந்த பிரச்சனை. இந்தியா காந்தி, வ்பாஜ்பாய் உள்ளிட்டோர் பிரதமராக இருந்த போது, திமுக அழுத்தத்தால் சிறப்பு சட்டம் கொண்டு வந்ததை ஏற்றுக் கொள்கிறோம். மத்திய அரசுக்கு எதிராக, மாநில உரிமைகளுக்காகவும் திமுக போராடியுள்ளது. அவர்கள் சலுகை கொடுக்கிறார்கள் என்றால், அது தேர்தலுக்கானது.
மக்கள் தொகையை கணக்கில் எடுத்து கொள்ளாமல், அதிக ஜிடிபி உள்ள மாநிலத்திற்கு அதிக எம்பிக்கள் என்று மத்திய அரசு கூறலாமே.. ஏன் கொடுக்கவில்லை? ஏப்ரல் மாதத்தில் மசோதா தோல்வி அடைய திமுக தான் காரணம். தவெகவுக்கு எம்பிக்கள் இல்லை. அதனால் மாநில உரிமை தொடர்பான பிரச்சனைகள் வரும் போது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக நிற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
