விஜய் தரப்பில் இருந்து திட்டமிட்டு 'ஜனநாயகன்' காட்சிகள் லீக் செய்யப்பட்டதா? ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்தே ஜனநாயகன் படத்தின் காட்சிகளை கசியவிட்டுள்ளதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார். இது விஜய்க்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் என்று கூறிய ஆதவ் அர்ஜுனா, இந்தியாவில் சாட்டிலைட் கட்டுப்பாடு பாஜகவின் கைகளில் தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக இன்னும் ரிலீஸ் செய்யப்படவில்லை. இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் சோசியல் மீடியாவில் கசிந்துள்ளன. ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகள் நல்ல தரத்தில் கசிந்துள்ளதால், படக்குழுவினர் மீதே சந்தேகம் அதிகரித்துள்ளது.

Aadhav arjuna

அதேபோல் ஜனநாயகன் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய் மாற்றம் என்று பேசுகிற காட்சி கசிந்திருக்கிறது. இதனால் விஜய் தரப்பே தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் வகையில் இந்த காட்சிகளை வெளியிட்டதா என்ற விவாதமும் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜனநாயகன் படக் காட்சிகள் லீக்கானது குறித்து அக்கட்சியின் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.

அதில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், ஒரு திரைப்படம் ரிலீஸாவதற்கு முன் அது சாட்டிலைட் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். அந்த சாட்டிலைட் பாஜக கட்டுப்பாட்டில் உள்ளது. இது ஒரு வகையான மிரட்டல். ஜனநாயகன் படத்தை லீக் செய்து விஜய்க்கும், தயாரிப்பாளருக்கும் சிக்கல் உருவாக்கலாம் என்று நினைக்கிறார்கள். இதுபோன்ற திட்டமிட்ட செயலை செய்வது மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தான்.

எல்.முருகனும், உதயநிதி ஸ்டாலினும் இணைந்து ஜனநாயகன் படத்தை முடக்க கூடிய செயல்களை செய்கிறார்கள். விஜய்க்கு என்ன இழப்பு வந்தாலும், அதனை தமிழக மக்கள் உருவாக்குவார்கள். ஜனநாயகன் லீக் விஷயத்திற்கு தயாரிப்பாளர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். விஜய்க்கு இந்த 10 நாட்களில் அழுத்தம் கொடுக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

விஜய்யின் கண்ணீருக்கு மக்கள் பதில் அளிப்பார்கள். கரூரில் தொடங்கிய திமுகவின் தாக்குதலை மக்கள் கண்காணித்து கொண்டிருக்கிறார்கள். திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அத்தனை நிர்வாகிகளும் சேர்ந்து இப்படி செய்கிறார்கள். இதுபோன்ற தவறான அரசியலை கருணாநிதியும் செய்தார். எம்ஜிஆர்க்கு எப்படி மக்கள் நியாயம் கேட்டார்களோ, அதுபோல் விஜய்க்கும் நியாயம் கேட்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+