தவெக - அதிமுக இடையில் பாலமாக செயல்படும் லீமா ரோஸ்.. மாமியார் மூலம் கேமை தொடங்கிய ஆதவ் அர்ஜுனா!
சென்னை: தவெக ஆட்சி அமைக்க அதிமுகவிடம் ஆதரவு கோரி விஜய் தரப்பு பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது. லால்குடி தொகுதியில் வென்ற அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் மற்றும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா இருவரும் இந்த பேச்சுவார்த்தைக்கு பாலமாக அமைந்திருக்கின்றனர். அதற்கு சாதகமாக நேற்று எடப்பாடி பழனிசாமியை லீமா ரோஸ் சந்தித்துவிட்டு புறப்பட்டு சென்றிருந்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. ஆனாலும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. பெரும்பான்மைக்கு இன்னும் 6 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற நிலை நிலவி வருவதால், தவெகவின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் இந்த திடீர் செயல்பாடுகளின் பின்னணி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொண்ட கேபி முனுசாமி, தவெக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு தராது என்று நேரடியாகவே அறிவித்தார்.
ஆனால் கேபி முனுசாமிக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியை லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற லீமா ரோஸ் தனியாக சந்தித்து சென்றார். அதற்கு முன் அதிமுக உடன் தவெக பேசி வருவதாகவும் கூறி இருந்தார். இதன் மூலமாக தனது மாமியார் லீமா ரோஸ் மூலமாக ஆதவ் அர்ஜுனா அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதாக தெரிகிறது.
இதன் காரணமாகவே லீமா ரோஸ் செய்தியாளர்களிடம் பேசிய அடுத்த நாள், உடனடியாக சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வரவழைக்கப்பட்டிருக்கிறார். ஒருவேளை தன்னை மீறி அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவிடக் கூடாது என்ற காரணத்தினால் மட்டுமே, அவர்கள் உடனடியாக புதுச்சேரிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்திருப்பது கூடுதலாக பார்க்கப்பட வேண்டியதாக உள்ளது. இதன் மூலமாக தவெக - அதிமுக இடையிலான பேச்சுவார்த்தையில் லீமா ரோஸ் - ஆதவ் அர்ஜுனா இருவரும் பாலமாக செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை எந்தக் கட்சிக்கு சாதகமாக முடியும் என்பதே இப்போது பலரின் கேள்வியாக இருக்கிறது.
-
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா!











Click it and Unblock the Notifications