"குதிரை பேரத்தில் ஈடுபட்டது திமுகதான்.. அது திமுக MP ஹோட்டல்" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "திமுக தான் குதிரை பேரம் நடத்தியது. திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் ஹோட்டலில் தான் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை தங்க வைத்திருந்தனர். அங்கு தங்க வைத்தது யார் என்று விசாரணை நடத்தப்பட்டு, அதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என வெளியிடப்படும்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் நடந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிகழ்ச்சியில் பேசிய ஐ.யூ.எம்.எல் எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா, "என்னையும், அமைச்சர் ஷாஜகானையும் தேடி கோடி, கோடியாக பணம் கொண்டு வந்து, ஆதரவு கொடுங்கள்... கையெழுத்துப் போடுங்கள் எனக் கேட்டார்கள். நாங்கள் கோடிக்கு சாய்ந்தவர்கள் அல்ல. கொள்கைக்குச் சாய்ந்தவர்கள். கடைசி வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-கில்தான் இருப்போம் எனக் கூறி அவர்களை விரட்டினோம். எங்களிடம் எந்த அமைச்சர் பதவி கேட்டாலும் கொடுக்கத் தயார் என்றார்கள்." எனப் பேசினார்.

Aadhav Arjuna

அதைத் தொடர்ந்து தவெக குதிரை பேரம் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இன்று சட்டசபையில் இதுதொடர்பாக விவாதம் எழுந்தது. அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் திமுகதான் குதிரை பேரத்தில் ஈடுபட்டது எனக் குற்றம் சாட்டி உள்ளார்.

சட்டசபையில் இன்று பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "எதிர்க்கட்சித் தலைவர் அவைக்கு வெளியில் ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டியில் எங்களது கூட்டணிக் கட்சி ஐயூஎம்எல் குதிரை பேரத்தில் ஈடுபட்டது என பதிவு செய்திருக்கிறார். இதை கடந்த இரண்டு நாட்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு உரையில் பேசியதைத் திரித்து, தவெக மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டைச் செய்யக்கூடிய ஒரு பதிவைச் செய்து கொண்டிருக்கிறார்.

தேர்தலில் எங்களுக்கு வெற்றி கிடைத்தவுடன் மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்கி, காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியின் ஒத்துழைப்புடன் காங்கிரஸ் காரிய கமிட்டியின் கடிதம் கிடைத்தது. காங்கிரஸ் கூட்டணியில் கேரளாவில் ஐயூஎம்எல் இருக்கிறது. அந்த மதச்சார்பற்ற கொள்கைகளின் உறுதியுடன், என்னுடைய தலைவர் ஆட்சி அமைக்க வேண்டும் என்கின்ற கருத்துடன் ஐயூஎம்எல் கேரளாவில் அமைச்சரவையில் பங்கேற்றவுடன், எங்கள் தலைவருடைய வழிகாட்டுதலுடன் ஐயூஎம்எல் கேரளா தலைவர்களுடன் தவெக சார்பாக நாங்கள் பேசினோம்.

அதன்பிறகு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கட்சித் தலைவர்களுடன் நாங்கள் பேசினோம். அதன்பிறகு விசிக, கம்யூனிஸ்ட் தலைவர்கள், அகில இந்திய தலைவர்களுடன் நாங்கள் பேசினோம். எந்தவித சட்டமன்ற உறுப்பினர்களிடமும் தனிப்பட்ட முறையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரோ நாங்களோ எப்போதும் பேசவில்லை. இந்த அரசு ஜனநாயகப்படி மக்கள் தீர்ப்பளித்ததைத் தலைவணங்கி, காங்கிரசும், ஐயூஎம்எல், விசிக, கம்யூனிஸ்ட் தோழர்களும் அனைத்துத் தோழர்களும் ஜனநாயகப் பார்வையுடன் ஆட்சி அமைத்ததே தவிர, குதிரை பேரத்தை நடத்தியது யார்? என்பது தெரியும்.

இப்போது அமைச்சருடைய சட்டமன்ற உரையில் கூறியது போல் அக்கார்டு ஹோட்டலில் தங்க வைத்தது யார்? அந்த இரண்டு எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்ட அக்கார்டு ஹோட்டலின் ஓனர் யார் என்றால் ஜெகத்ரட்சகன், திமுக எம்.பியின் ஹோட்டல். அப்படியென்றால் அவங்களைத் தங்க வைத்தது யார் என்று கூடிய விரைவில் விசாரணை நடத்து வேண்டும் என்பதை நாங்கள் பதிவு செய்கிறோம். திமுகதான் குதிரை பேரம் நடத்தியது" எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+