ஆதவ் அர்ஜுனாதான் முதலமைச்சர்! வில்லிவாக்கம் டர்னிங் பாயிண்ட்! கிளம்பும் புது பஞ்சாயத்து
சென்னை: நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டு அரசியலில் வில்லிவாக்கம் தொகுதி அதிர்வலையை ஏற்படுத்தப்போவதாகவும், குறிப்பாக ஆதவ் அர்ஜுனா வெற்றிப்பெற்று விஜய்யை ஓரம் கட்டுவார் என்றும் சோஷியல் மீடியாக்களில் பேச்சுகள் அடிபடுகின்றன.
முன்னதாக தேர்தல் கருத்துக் கணிப்புகளில், திமுகதான் வெற்றி பெறும் என்று பெரும்பாலான நிறுவனங்கள் சொல்லிவிட்டன. ஆக்சிஸ் மை இந்தியா எனும் நிறுவனம் மட்டும், தவெக வெற்றி பெறும் என்று கூறியிருக்கிறது. இப்படி இருக்கையில், நாளை ரிசல்ட் அரசியல் கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.

ஆனால், மறுபுறம் தவெகவினர் இப்போதே கோஷ்டி பிரிந்து செயல்பட தொடங்கிவிட்டனர். ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக சிலர் நரேட்டிவ் செட் செய்ய தொடங்கியிருக்கிறார்கள். அதாவது ஆதவ் ஆர்ஜுனா பணம் உள்ள பார்ட்டி. அப்படி இருக்கையில் எதற்காக ஒரு சாதாரண எம்எல்ஏவுக்கு போட்டியிட வேண்டும்? எம்எல்ஏக்களின் வருமானத்தை விட அதிக வருமானம் கொண்டிருக்கும் ஆதவ், எதற்காக தேர்தல் களத்திற்கு வர வேண்டும்? அவருடைய கணக்கே வேற!
ஆக்சிஸ் மை இந்தியாவின் கணிப்பு உண்மை எனில், தவெகவில் விஜய்யை ஆதவ் ஓரம் கட்டிவிடுவார். காலை 10 மணிக்கு மேல் முழுக்க முழுக்க தவெகதான் ஆதிக்கம் செலுத்தும். மதியம் 2 மணிக்கு மேல் 100 தொகுதிகளுக்கு மேல் தவெக முன்னிலை வகிக்கும்(!). மாலை 4 மணிக்கெல்லாம் 170 முதல் 180 தொகுதிகள் வரை தவெக வெற்றிக்கு பக்கத்தில் நிற்கும்(?). அந்த நேரத்தில்தான் ஒரு ட்விஸ்ட் நடக்கும்.
அதாவது, கட்சி தொடங்கியதிலிருந்து ஒரு குண்டூசி வாங்க வேண்டும் என்றாலும் கூட, அதற்கு நான்தான் படி அளந்திருக்கிறேன். எனவே, நான்தான் முதலமைச்சராக இருப்பேன் என ஆதவ் அர்ஜுனா விஸ்வரூபம் எடுப்பார். விஜய் முரண்டு பிடித்தால் கடுமையான வாக்குவாதம் எழும். அப்புறம், போனால் போகட்டும் என துணை முதலமைச்சர் அல்லது நிதியமைச்சர் பதவியை கேட்டு வாங்கிக்கொள்வார். விஜய்க்காக அரசியலுக்கு வந்தவர் கிடையாது ஆதவ், அவருடைய திட்டமே வேறு.. என்று ரைட்டப்கள் சோஷியல் மீடியாக்களில் பார்க்க முடிகிறது.
ஆதவ் விஸ்வரூபம் எடுக்கிறாரோ இல்லையே.. ஆனால், தவெகவினர் சோஷியல் மீடியாவில் எடுத்திருக்கும் விஸ்வரூபம் வேற லெவல். ஆனால் இந்த கதைகள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக கலாய்க்கப்பட்டு வருகிறது. தவெக ஆட்சிக்கு வராது என்று பெரும்பாலான கணிப்புகள் சொல்லியும், ஆதவ் அர்ஜுனாவை வைத்து இப்படி உருட்டுவதெல்லாம் விஜய் ரசிகர்களால் மட்டும்தான் முடியும். அவர்கள் உலகமே தனி போல.. என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
எனவே நாளை ரிசல்டில் உண்மை என்ன என்று தெரிந்துவிடும். இதுக்கு முன்னாடி எல்லாம் திங்கள் கிழமை வந்தால்.. எதுக்குதான் வந்துச்சோ! என புலம்பியவர்கள் எல்லாம், நாளை வரும் திங்களுக்காகத்தான் தவியாய் தவித்து கிடக்கின்றனர். என்னதான் நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. வேலையைக் காட்டிய விசிக! விஜய்க்கு பெரிய தலைவலி! திமுகவின் ப்ளானா? -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தவெகவில் சேர்ந்த 2 நாளில்! விஜய் விவாகரத்து வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்! யார் இந்த ப்ரீத்தி ஷெட்டி? -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
White Paper: வரலாற்றிலேயே இதுவரை இல்லாத உச்சம்! தமிழகத்தில் தனிநபர் மீதான கடன் எவ்வளவு தெரியுமா? -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்!











Click it and Unblock the Notifications