உங்களை ஒரு அடியாளாக பயன்படுத்துகிறது திமுக.. திருமாவளவனை அட்டாக் செய்த ஆதவ் அர்ஜுனா!
சென்னை: விசிக தலைவர் திருமாவளவனை ஒரு அடியாளாக திமுக பயன்படுத்துவதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டி இருக்கிறார். அண்ணா அறிவாலயத்தில் பெரியார் மற்றும் அம்பேத்கருக்கு சிலை வைக்காமல், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைத்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய ஆதவ் அர்ஜுனா, திமுக ஆட்சியில் ஊழல் இல்லை என்று சிபிஐ, சிபிஎம் கட்சிகளால் சொல்ல முடியுமா என்றும் சவால் விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. சுமார் 37 நாட்களுக்கு பின் தவெக தலைவர் விஜய் மீண்டும் ஆக்டிவ் மோடுக்கு வந்துள்ளார். கிறிஸ்மதுஸ் விழாவிற்கு பின் சிபிஐ விசாரணைக்கு மட்டும் ஆஜரான விஜய், ஜனநாயகன் படத்தின் பிரச்சனையின் போது கூட குரல் கொடுக்கவில்லை. இதனால் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசுகையில், 2026ல் தவெகவை எதிர்த்து திமுக கூட்டணியில் 13 கட்சிகளும், அதிமுக கூட்டணியில் 8 கட்சிகளும், இன்னொருவர் பேசிக் கொண்டே இருப்பார்.. அவரை பற்றி பேச வேண்டாம்.. மொத்தமாக 24 கட்சிகள் இருக்கின்றன. இதனை எப்படி சமாளிப்பது என்று விஜய்யிடம் கேட்டேன். அதுதான் நம்பிக்கை.
2021ஆம் ஆண்டுக்கு பின் திமுக, திருட்டு திமுக என்று மாறிவிட்டது. அம்பேத்கர், பெரியாரை இணைத்த ஒரே கட்சி தவெக. அண்ணா அறிவாலயத்தில் பெரியார், அம்பேத்கர் சிலையை வைக்கவில்லை? கருணாநிதி சிலையை மட்டும் வைத்திருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினை அம்பேத்கரின் வாரிசு என்று திருமாவளவன் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் திருமாவளவன் திமுக ஒரு அடியாளாக பயன்படுத்தி வருகிறது.
அதனை முதலில் மறந்துவிடாதீர்கள். ஸ்டாலின் என்ன சாதனை செய்துவிட்டார்? தூக்கத்தில் நடக்கும் வியாதி ஸ்டாலினுக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். ஏன் திமுகவுக்கு இவ்வளவு பயம்.. எங்கு பாஜகவை எதிர்க்க வேண்டுமோ, அங்கு எதிர்ப்போம். நீட், ஜிஎஸ்டி, இந்தி திணிப்பு என்றால் முதலில் எங்களிடம் இருந்துதான் குரல் வரும்.
திமுகவில் ஊழல் இல்லை என்று விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சிகளால் சொல்ல முடியுமா? செந்தில் பாலாஜியால் பெரியார் பற்றி பேச முடியுமா? தவெக தலைவர் விஜய் கட்சியின் கட்டமைப்பை 2 மாதங்களாக வலுப்படுத்தி வருகிறார். தவெக யாருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது.. பெண்களை மட்டுமே நம்பி விஜய் கட்சியை உருவாக்கினார் என்று தெரிவித்தார்.
-
அவர்கள் தற்குறி அல்ல.. தவெகவின் அம்புக்குறி.. விஜய் ஆட்சி மீது பொறாமையால் விமர்சனம்.. லாரன்ஸ் பேட்டி -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
திருமணத்தை மீறி நடிகையுடன் தொடர்பு! முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை! -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
"டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி 1 ரூபாய் கூட வாங்க கூடாது.. தவறு செய்தால் டிஸ்மிஸ்”.. அமைச்சர் அதிரடி!












Click it and Unblock the Notifications