ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா!
சென்னை: ரூ.25 கோடி வரி கட்டியிருக்கும் போது எப்படி சொத்தை மறைக்க முடியும் என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார். வேட்புமனுவில் தன்னுடைய மற்றும் குடும்பத்தினரின் நிறுவனங்கள் குறித்து முழுமையான விவரங்களை கூறிவிட்டதாகவும், திமுக குடும்பமே வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டாலும் தனது வெற்றியை தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். அதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அந்த வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது. அதில் ஆதவ் அர்ஜுனா தனது மனைவி பெயரிலான 35 நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிடாததால், அவரின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்த நிலையில், அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதனால் அதிர்ச்சியடைந்த தவெகவினர், பின்னர் ஆசுவாசமாகினர். இதன்பின் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தவெக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு வருகிறது. விஜய்யின் இரு வேட்புமனுக்களும் ஏற்பட்டுள்ளன.
234 தொகுதிகளில் தவெகவால் வேட்பாளர்கள் போட முடியுமா என்று திமுகவினர் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது வேட்பாளர்கள் போட்டு, அவர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு வருகிறது. திமுகவினர் வழக்கமாக சுயேட்சைகள் என்று போட்டு வைப்பார்கள். எனது வேட்புமனுவில் மார்ச் 25ஆம் தேதி 2026 வரை என்ன கணக்கு வழக்கு இருக்கிறதோ, அதனை வெளிப்படையாக கூறி இருக்கிறேன்.
என்னுடைய சொத்துகளை தான் கணக்கு காட்ட வேண்டும். என்னுடைய நிறுவனங்களை பதிவு செய்திருக்கிறேன். 3, 4 நிறுவவங்களின் பங்குகளை பதிவு செய்துவிட்டேன். குடும்பத்தினரின் நிறுவனங்கள் எல்லாவற்றையும் பதிவு செய்துவிட்டேன். பங்குதாரராக இருக்கும் நிறுவனங்களை வேட்புமனுவில் கூற வேண்டும். இயக்குநராக இருக்கும் நிறுவனங்களை கணக்கில் காட்ட தேவையில்லை.
இந்த அடிப்படை கூட திமுக வழக்கறிஞருக்கு தெரியவில்லை. நான் மட்டுமே ரூ.25 கோடி வரி செலுத்தி இருக்கிறேன். எப்படி சொத்தை மறைக்க முடியும்.. வேட்புமனுவில் சொத்துகள், நிறுவனங்கள் குறித்து ஏதும் சந்தேகம் எழுந்தால், அதனை நிராகரிக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது. அதேபோல் தேர்தல் அதிகாரி என்னுடைய வேட்புமனுவை ஏற்றுள்ளனர்.
கடந்த சில தேர்தல்களில் திமுக எதிரியே இல்லாமல் வென்றுவிட்டது. திமுக குடும்பமே இங்கு பிரச்சாரம் மேற்கொண்டாலும் வெற்றியை தடுக்க முடியாது. வில்லிவாக்கம் தொகுதியில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. இந்த தொகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. என்னுடைய வேட்புமனுவை ஏற்ற தேர்தல் அதிகாரிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்! -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ











Click it and Unblock the Notifications