Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணக்காரர் ஆதவ்.. அதான் பதவி கொடுத்தோம்! உண்மையைச் சொன்ன விசிக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரிய பணக்காரர் என்பதால்தான் ஆதவ் அர்ஜுனாவுக்கு கட்சியில் இணைந்த உடனேயே பெரிய பதவி வழங்கப்பட்டது என்ற கருத்தை அக்கட்சியின் து.பொ.செ. கவுதம சன்னா ஏற்றுக் கொண்டுள்ளார்.

விசிக துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா அடுத்து தான் எந்தக் கட்சியில் இணையப் போகிறேன் என்பதை ஊடகங்களைச் சந்தித்து விளக்கம் அளிப்பேன் என்று அறிவித்திருந்தார்.

adhav arjuna ameer

அவர் விஜய் கட்சிக்குச் செல்வார் எனப் பலரும் எதிர்பார்த்திருந்த தருணத்தில், அதைப் பற்றி வெளிப்படையாகச் சொல்ல மறுத்துள்ளார் ஆதவ். அவருக்கு அரசியல் அடையாளம் கொடுத்த கட்சி விசிகதான். அவர் திமுகவில் வியூக வகுப்பாளராகவே இருந்துள்ளார். அக்கட்சியில் அவர் இணையவில்லை. ஆகவே, அவரது முதல் எண்ட்ரி விசிக மூலம் கடந்த 2 ஆண்டுகள் முன்பாக நடந்தது.

வந்த வேகத்திலேயே அவருக்குக் கட்சியில் து.பொ. செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதேபோல் விசிக ஆரம்பக் காலத்திலிருந்தே ஆன் லைன் சூதாட்டத்திற்கு எதிராகக் குரல்கொடுத்த கட்சி. அதற்காக நடந்த மரணங்களைக் கண்டித்துப் போராடிய இயக்கம். அப்படி உள்ள போது ஒரு லாட்டரி அதிபரின் குடும்ப பின்புலம் கொண்ட ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் எப்படி இணைத்தார்கள் என்ற கேள்வி பலரிடம் நிலவியது. இந்த முரண்பாடுகள் அவர் கட்சியில் இணைந்த போது எழவில்லை.

திருமா மது ஒழிப்பு மாநாடு பற்றிப் பேச தொடங்கிய பிறகு தருமபுரி முன்னாள் திமுக எம்.பி செந்தில்குமார் லாட்டரி ஒழிப்பு பற்றிப் பேச ஆரம்பித்தார். அந்த சந்தேகம் பற்றி விளக்கம் அளித்து விசிக து.பொதுச் செயலாளர் கவுதம சன்னா, “அவர் கட்சிக்குள் வரும்போது ஒரு வியூக வகுப்பாளராகதான் வந்தார். அவர் ஐபேக் மற்றும் பென் ஆகிய கம்பெனிகளில் இருந்து விலகிய பின் விசிகவுக்கும் திருமாவுக்கு பணியாற்ற நினைப்பதாகச் சொன்னார். அதனால் அவரை அரவணைத்தோம்.

அதன் பின்னர் அவர் தன்னை ஒரு விளையாட்டு வீரர் என்றும் தனியாகப் பல நிறுவனங்களை நடத்தியவர் என்றும் மார்ட்டின் லாட்டரி தொழிலுக்கு தனக்கும் தொடர்பு இல்லை என்றும் உறுதி அளித்தார். முழுதாக தொழிலை விட்டு விலகி அரசியலில் ஈடுபட இருக்கிறேன் என்று கூறி திருமாவை நம்ப வைத்தார். அதனால் அவருக்குக் கட்சியில் பதவி வழங்கப்பட்டது” என்று பேசி இருக்கிறார்.

கவுதம சன்னா கிங் 360 யூசியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், “ஆதவ் அர்ஜுனா விசிகவில் இணைந்த போது அவர் கேட்ட பதவி வேறு. அதை கொடுக்க முடியாது என திருமா மறுத்துவிட்டார். ஆக, ஆதவ் அவரது அறிக்கையில் திருமாவே வலியப் போய் பதவி கொடுத்தார் எனச் சொல்லி இருப்பது பொய்” என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசிகவில் ஆதவ் இணைந்த போதே திருமாவளவனை துணை முதல்வராக மாற்றுவோம் என்ற கருத்தைத் தொண்டர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளார். அது பல ஆண்டுகளாக அடிமட்ட தொண்டர்களின் ஆசையாக இருந்ததால், அவரைப் பலரும் நம்பி உள்ளனர். ஆகவே, அவர் சர்ச்சையான பேச தொடங்கியபிறகு உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் திருமா தயங்கி இருக்கிறார். அது கட்சி தொண்டர்களின் விருப்பத்திற்கு எதிராக மாறினால் அது கட்சியைப் பாதிக்கும் என்றே அமைதி காத்திருக்கிறார். இதை கவுதம சன்னாவும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அதேபோன்று ஆதவ் கட்சிக்குள் வந்த உடனேயே அவர் பணக்காரர் என்ற காரணத்தால்தான் உடனடியாக து.பொ.செயலாளர் பதவி வழங்கப்பட்டது என்ற விமர்சனம் அவருக்குப் பதவி வழங்கப்பட்டது முதலே முன்வைக்கப்பட்டு வந்தது. அதைப் பற்றி கருத்துச் சொன்ன கவுதம சன்னா, அதை விமர்சனத்தை ஏற்பதாகவும் ஆனால், கடந்த 30 ஆண்டுகள் மேலாகக் கட்சிக்குச் செலவு செய்து வளர்த்தவர் ஆதவ் இல்லை. அடிமட்ட தொண்டர்கள்தான். இன்று கட்சி வளர்ந்த பின்பே அவர் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+