விரைவில் திமுக ஆட்சி.. ஸ்டாலின் சவால்! டெல்லியில் முகாமிட்ட விஜய், ஆதவ்! தீர்மானத்தை முறியடிக்க கேம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மடியில் கனம் இருப்பவர்களுக்கே வழியில் பயம் இருக்கும் என்பார்களே.. அப்படித்தான் தவெகவினருக்கு தற்போது உச்சபட்ச பயம் ஏற்பட்டு உள்ளதாம். அது வேறு ஒன்றும் அல்ல நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த அச்சம்தான் என்கிறார்கள்.. இதை மையமாக வைத்தே இன்று டெல்லியில் அடுத்தடுத்து அரசியல் மீட்டிங்குகள் நடைபெற்றதாக கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

ஒருபுறம் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற பேச்சு ஆளுங்கட்சி வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.. மறுபுறம், 'விரைவில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்' என முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் நம்பிக்கையுடன் முழங்கியுள்ளார்.

Aadhav arjuna

இத்தகைய நெருக்கடியான சூழலில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை உறுதிப்படுத்தவும்.. சட்டமன்றத்தில் பெரும்பான்மையைத் தக்கவைக்கவும் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு முக்கியச் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர். யாரும் கடையில் கழன்று கொள்ளாமல் இருக்க பல்வேறு பேரங்களை நடத்தி வருகின்றனர்.

சோனியா காந்தி புத்தக வெளியீடு

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய Belonging: A Journey of Love என்ற சுயசரிதை நூலின் வெளியீட்டு விழா டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள விஜய் டெல்லி சென்றுள்ளார். இந்த விழாவில் பங்கேற்கும் காங்கிரஸ் அல்லாத ஒரே முதல்வர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிப்பார்வைக்கு இது புத்தக வெளியீட்டு விழா பயணமாகத் தெரிந்தாலும், இதன் பின்னணியில் ஆட்சியைக் காப்பாற்றும் முக்கிய அரசியல் வியூகம் அடங்கியுள்ளது.

காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்த விஜய், தற்போது மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுடன் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோரைச் சந்தித்துப் பேசி உறவைப் பலப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.

இடதுசாரித் தலைவர்களுடன் ஆதவ் அர்ஜுனா ரகசிய ஆலோசனை

விஜய்யின் வருகைக்கு முன்னதாகவே டெல்லி சென்ற ஆதவ் அர்ஜுனா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தேசியத் தலைவர்களை நேரில் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தியுள்ளார்.

சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஒத்துழைப்பு, ஆட்சிக்கு ஆபத்து வரும் நேரத்தில் மிகவும் அவசியமானதாக உள்ளது. அதிலும் சிபிஎம், சிபிஐ உடன் தற்போது தவெகவிற்கு மோதல் போக்கு உள்ளதால்.. அதை சரி செய்ய ஆதவ் களமிறங்கி உள்ளார்.

கூட்டணியை சிதறாமல் அப்படியே தக்கவைத்துக் கொள்வதோடு, எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் அதனைத் தடுத்து நிறுத்தவும் அல்லது வாக்கெடுப்பில் எளிதாக வெற்றி பெறவும் இந்த டெல்லி சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

'விரைவில் திமுக ஆட்சிக்கு வரும்'

இதற்கிடையில், சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின், தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில்.. தற்போதைய தவெக ஆட்சி ஒரு மோசமான நிர்வாகத்தை நடத்திக்கொண்டிருக்கிறது. இத்தகைய ஆட்சி நடக்கும் சூழலில் என்னை இன்னும் முதலமைச்சர் என்று சிலர் அழைப்பது எனக்கு வேதனையையும் வெட்கத்தையும் தருகிறது.

இனி என்னை முதலமைச்சர் என்று அழைக்க வேண்டாம்.. விரைவில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.. என்று ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆறு மாத கால ஹனிமூன் முடிந்துள்ள நிலையில், ஸ்டாலினின் இந்தப் பேச்சு சட்டமன்றத்தில் ஆட்சி மாற்றத்திற்கான நகர்வுகள் தீவிரமடைந்துள்ளதைக் காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ஆட்சியைக் காக்கும் முயற்சி

ஏற்கனவே மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், எம்எல்ஏக்களுக்கு முக்கிய உத்தரவுகளை விஜய் பிறப்பித்தார் . நவம்பர் 13-க்குப் பிறகு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வரலாம் என்ற தகவலால்.. எதிர்க்கட்சிகளின் டிராப்பில் சிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டார். மேலும், அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வந்தால் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.

ஒருபுறம் சொந்தக் கட்சி எம்எல்ஏக்களைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம்.. மறுபுறம் திமுக-அதிமுகவின் குதிரை பேர முயற்சிகளை முறியடிப்பது என்று தவெக தீவிரமாக டிபன்ஸ் ஆடிக்கொண்டு இருக்கிறது.

இதற்கு இடையே டெல்லிக்கு சென்று கூட்டணிக் கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்களைச் சந்திப்பதன் மூலம் தனது ஆட்சிக்கு தேவையான பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டத்தில் விஜய் இறங்கி உள்ளார். இன்று நடக்கும் டெல்லி சந்திப்புகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் எத்தகைய மாற்றங்கள் நிகழப்போகின்றன என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+