தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர்.. அடுத்த குறி வைத்த ஆதவ் அர்ஜுனா.. ஸ்டாலினுக்கு பாராட்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். 5, 6 வட மாநிலங்கள் சேர்ந்தால் ஒரு பிரதமரை உருவாக்க முடியும் என்ற நிலையை மாற்ற வேண்டும் என்று கூறிய ஆதவ் அர்ஜுனா, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாட்டின் 39 எம்பிக்களும் எதிராக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

தமிழக சட்டசபையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்தது. இதன்பின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ளார். மாநிலங்கள் இல்லாமல் மத்திய அரசு இல்லை. மத்திய அரசு எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும்.

Aadhav Arjuna

தேர்தல் அரசியலுக்காக பாஜக சட்டங்களை கொண்டு வர நினைக்கிறது. அரசியலமைப்ப பாதுகாக்கவே தற்போது சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருந்தாலும், அரசியலில் பிரதிபலிக்கவில்லை. மாநில சுயாட்சிக்காக கலைஞரும், ஜெயலலிதாவும் குரல் கொடுத்தார்கள்.

நாடாளுமன்றத்தில் உறுப்பினர் எண்ணிக்கை மாறுபட்டால், தமிழக உரிமைகள் பறிபோகும். நீட் தேர்வை விட மிக முக்கிய தீர்மானம் தொகுதி மறுவரையறை தீர்மானம். இந்தியாவிலேயே தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்முறையாக கொடுத்தவர் ஸ்டாலின். அதனை நாங்கள் வரவேற்கிறோம். இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த திமுகவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி.

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்டால் தமிழ்நாட்டின் 39 எம்பிக்களும் சேர்ந்து எதிராக வாக்களிக்க வேண்டும். அரசியல் ரீதியாக திமுகவும், காங்கிரஸ் கட்சியும் ஒன்றாக இருந்து எதிர்க்க வேண்டும். தொகுதி மறுவரையறையில் அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்த்தப்பட்டால், வட இந்தியா ஆதிக்கம் அதிகமாகும்.

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று அறிஞர் அண்ணா அன்றே முழங்கினார். 5 முதல் 6 வட இந்திய மாநிலங்கள் ஒன்றிணைந்தாலே பிரதமரை உருவாக்கும் சூழல் இருந்து வருகிறது. அது மாற்றப்பட வேண்டும். தென்னிந்தியாவில் இருந்து.. ஏன் தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+