அடேங்கப்பா! வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனாவுக்காக.. 24*7 வேலை பார்க்கும் தவெக! டஃப் கொடுக்கும் திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்காக 24*7 என கட்சியினர் வேலை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வில்லிவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் கார்த்திக் மோகன் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார். அவரை எதிர்த்து ஆதவ் அர்ஜுனா போட்டியிடுவதால் களம் திமுக vs தவெக என மாறியிருக்கிறது.

Aadhav Arjuna

நான் எம்எல்ஏவாக வந்தால் என்னென்ன செய்வேன்? என்பது குறத்து திமுகவின் கார்த்திக் மோகன் தொடர்ந்து வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். அயனாவரத்தை விளையாட்டு ஹப்பாக மாற்ற முயற்சிப்போம். உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தி தருவோம், உலகத்தரம் வாய்ந்த நூலகம் மற்றும் அறிவுத்தளம் அமைக்கப்படும், சர்வதேச தரத்திலான பூங்காக்கள் அமைக்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பதிலுக்கு தவெக தரப்பிலிருந்து பெரிய வாக்குறுதிகள் ஏதும் வரவில்லை. ஆனால், களத்தில் தங்கள் தொண்டர்கள் தீவிரமாக பணியாற்றி வருவதாக நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர். 24 மணிநேரமும் வாரத்தில் 7 நாட்களும் தங்கள் தொண்டர்கள் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருவதாகவும், டோல் ஃப்ரீ நம்பர் மக்களிடம் கொடுக்கப்பட்டிருப்பதால், அதில் மக்கள் புகார் அளிக்கின்றனர் என்றும் கூறியிருக்கின்றர்.

இந்த புகார்களை தொகுத்து, எம்எல்ஏ ஆனவுடன் இந்த புகாரில் பெறப்பட்ட விஷயங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தனது சொந்த செலவில் தொகுதிகளில் நலத்திட்ட பணிகளை ஆதவ் அர்ஜுனா செய்ய இருக்கிறார். வில்லிவாக்கத்தில் எங்களுக்கு இருப்பது இளைஞர்களின் வாக்கு மட்டுமல்ல.. குடும்பத்தினரின் வாக்குகளும்தான் என்று கூறுகின்றனர்.

விஜய் பிரபலமான நடிகர் என்பதால், அவரது கட்சிக்கு இளைஞர்களின் ஆதரவு ஓரளவு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், பெரும்பாலானோர் ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் பின்புலம் குறித்தும், விஜய்யின் அரசியல் பின்புலம் குறித்தும் கேள்வி எழுப்புகின்றனர். விஜய் இதுவரை எத்தனை அரசியல் போராட்டங்களில் பங்கெடுத்தார்? மக்களின் வாழ்க்கையில் தலையீடு செய்வது அரசியல் தான். அப்பேற்பட்ட அரசியல் போராட்டங்களில் விஜய்யின் பங்கு என்ன?

ஒரு நடிகராக இருந்துவிட்டால் மட்டும் வாக்குகளை பெற தகுதியானவராக விஜய் மாறிவிடுவரா? அரசியல் களத்தில் அவருடைய நிலைப்பாடு என்ன என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+