திமுகவுக்கு வில்லங்கமான வில்லிவாக்கம்! குடும்பமே இறங்கி வேலை செஞ்சும்.. தோல்வி!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் களமிறங்கியிருந்ததால், இந்த தொகுதி குறித்த எதிர் பார்ப்பு எகிறியிருந்தது. இவருக்கு எதிராக கார்த்திக் மோகன் களமிறங்கியிருந்தார். தற்போது வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
முன்னதாக கருத்துக்கணிப்புகளில் திமுகதான் இந்த தொகுதியை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் விஜய் ரசிகர்கள் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆதரவளித்திருந்ததால், களம் மாறியிருக்கிறது. குறிப்பாக கார்த்திக் மோகனுக்காக, மு.க.ஸ்டாலின் குடும்பமே இறங்கி வேலை பார்த்திருந்தது. இருப்பினும், ஆதவ் அர்ஜுனாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

திமுகவின் கோட்டை
இத்தொகுதியில் அதிகபட்சமாக திமுக 6 முறை வெற்றி பெற்றுள்ளது. பி. ரங்கநாதன் (திமுக) மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் (அதிமுக) ஆகியோர் இத்தொகுதியில் தலா இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளனர். 2001-ல் பிரபல நடிகர் டி. நெப்போலியன் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் திமுகவின் ஏ. வெற்றிஅழகன் (பேராசிரியர் அன்பழகனின் பேரன்) 37,237 வாக்குகள் வித்தியாசத்தில் ஜே.சி.டி. பிரபாகரைத் தோற்கடித்தார்.
இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ள நிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. 43 வயதான ஆதவ் அர்ஜுனா, சுமார் 534.9 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்தத் தேர்தலின் பணக்கார வேட்பாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவர் வில்லிவாக்கம் தொகுதியில் வீடு வீடாகச் சென்று தீவிரப் பிரச்சாரம் செய்ததுடன், ஆளுங்கட்சியினர் பண விநியோகம் செய்வதாகத் தேர்தல் ஆணையத்தில் புகாரும் அளித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக அண்ணா நகர் எம்.எல்.ஏ எம்.கே. மோகனின் மகன் கார்த்திக் மோகனை திமுக களமிறக்கியிருக்கிறது. இத்தொகுதியைத் தக்கவைக்க திமுக அனைத்து பலத்தையும் பிரயோகித்துள்ளது. அதேபோல அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டிருக்கும் முன்னாள் எம்.பி-யான எஸ்.ஆர்.விஜயகுமார், அதிமுக-வின் வாக்கு வங்கியைத் தக்கவைக்க போராடியிருந்தார்.
வில்லிவாக்கம் ஒரு வரலாற்றுப் பார்வை
மிகப்பெரிய தொகுதி: ஒரு காலத்தில் ஆசியாவிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக வில்லிவாக்கம் இருந்தது. 2008-ல் தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகுதான் இது அம்பத்தூர், மாதவரம், மதுரவாயல், விருகம்பாக்கம் எனப் பல தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
தொழிலாளர் கோட்டை: தொடக்க காலத்தில் சிபிஐ(எம்) மற்றும் இடதுசாரிகளின் செல்வாக்கு மிகுந்த பகுதியாக இது இருந்தது. டபிள்யூ.ஆர். வரதராஜன் போன்ற தலைவர்கள் இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வெற்றி வித்தியாசம் (2021): கடந்த முறை திமுக-வின் வெற்றி அழகன் 76,127 வாக்குகள் பெற்றார். அவர் சுமார் 37,237 வாக்குகள் வித்தியாசத்தில் (மிகப்பெரிய மார்ஜின்) வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை.. பட்ஜெட் வரை அடக்கமா இருங்க.. இல்லைன்னா காலி! -
சில நாய்களுக்கு நான்வெஜ்தான் பிடிக்கும்.. ராகவா லாரன்ஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை! -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
டான்சர் ராகவா லாரன்ஸ் விஜய்யின் திருச்சி கிழக்கை குறிவைத்து.. ஆண்டிப்பட்டி ஹிஸ்டரி ரிப்பீட் ஆகுமா? -
நாய்க்கு பிரியாணி.. மக்களை இழிவுபடுத்திப் பேசிய ராகவா லாரன்ஸ்! எழுந்த கண்டனம்.. பறந்த விளக்கம்! -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
காணொலி விசாரணைக்கு நோ சொன்ன நீதிமன்றம்! முதல்வர் விஜய்-சங்கீதா நேரில் ஆஜராகனும்! விசாரணை ஒத்திவைப்பு -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அந்த குழந்தையே நீங்க தான் சார்.. தவெக கூட்டணி.. துரை வைகோ கொடுத்த ஹின்ட் -
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் அடுத்த நாள் பணியில் இருக்க முடியாது.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications