எம்எல்ஏக்களுக்கு கார் எதற்கா? 2,3 பங்களா வச்சிருக்கிற உதயநிதி ஏன் அரசு பங்களா கேட்டாரு! ஆதவ் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் கூட 2, 3 வீடுகள் இருக்கிறது. பிறகு ஏன் அரசு பங்களா கேட்கிறார் என நான் கேட்க முடியுமா என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.

காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ ஜோதிமணி, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனக்கு கார் வேண்டும் என கேட்டிருந்தார். இதையடுத்து அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.

aadhav arjuna udhayanidhi stalin

இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். கார் கேட்ட ஜோதிமணி எம்எல்ஏவிடம் ஒரு கார் இருக்கிறது. அது போல் அவரது சொத்து மதிப்பு ரூ 85 லட்சம் என தேர்தல் பிரமாண பத்திரத்தில் அவர் தாக்கல் செய்திருந்ததை சமூகவலைதள பக்கத்தில் பலர் பரப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று சட்டசபை கூடியதும் கார் விவகாரம் எதிரொலித்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், "கஜானாவை காலி செய்துவிட்டோம் என கூறிவிட்டு பிறகு எதற்காக எல்லா எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குகிறீர்கள்.

அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டு முதல்வர் விஜய் கொடுக்கும் கார்களை திமுக எம்எல்ஏக்கள் 59 பேரும் பெற மாட்டார்கள். பொருளாதாரத்தில் நலிந்துள்ள எம்எல்ஏக்களுக்கு மட்டும் கார் கொடுக்கலாம்" என உதயநிதி தெரிவித்தார்.

அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறுக்கிட்டு, கார் கொடுப்பதை உதயநிதி ஸ்டாலின் ஏதோ ஆடம்பரமாகவும் அரசியல் செய்யவும் பார்க்கிறார்கள். அது அப்படி கிடையாது. தவெக எம்எல்ஏக்களிடம் கூட கார்கள் இருக்கின்றன.

எனவே கார் இருக்கும் நாங்களும் கார்களை வாங்க மாட்டோம். யாருக்கெல்லாம் இல்லையோ அவர்கள் கடிதம் கொடுத்தால் அவர்களுக்கு கொடுப்பார்கள். நிறைய சட்டசபை உறுப்பினர்கள் ஏழ்மை பின்னணியில் இருக்கிறார்கள்.

ஒரு அறிவிப்பு என வரும் போது அனைவருக்கும் என்றுதான் அறிவிக்க வேண்டும். அதில் யாருக்கு தேவையோ அவர்கள் வாங்கிக் கொள்ளட்டும். உதயநிதி ஸ்டாலினிடம் 2,3 பங்களாக்கள் இருக்கின்றன. எனினும் அரசு பங்களா வேண்டும் என நான் பொதுப் பணித் துறை அமைச்சர் என்பதால் அவர் என்னிடம்தான் கடிதம் கொடுத்திருந்தார்.

அவரிடம்தான் 2, 3 பங்களா இருக்கே ஏன் அரசு பங்களா கேட்கிறார் என கேட்க முடியுமா? வீட்டை காட்டிலும் அரசு பங்களா என்றால் அங்கு நிறைய பொதுமக்கள் வந்து சந்திக்கலாம். மனு கொடுக்கலாம் என்ற அடிப்படையில்தான் பங்களா வழங்கப்படுகிறது.

அது போல் சட்டசபை உறுப்பினர்களும் அவர்களது தொகுதிகளுக்குச் செல்ல வேண்டும். அப்படியிருக்கும் போது அவர்களுக்கு கார் கொடுத்தால் உதவியாக இருக்கும் என்பதால்தான் கார் கொடுக்கிறோம். இதில் ஆடம்பரம் இல்லை" என்றார்.

உடனே குறுக்கிட்ட கே.என்.நேரு, "எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் அமைச்சர் அந்தஸ்துக்கு இணையானவர், அமைச்சர்களுக்கு கொடுக்கும் அனைத்து வசதிகளும் அவருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பது புரோட்டோகால், நாங்கள் கார் வேண்டாம் என்றுதானே சொன்னோம். அதற்காக ஏன் 2, 3 பங்களா இருக்கிறது என்றெல்லாம் ஆதவ் பேசுகிறார்" என கேள்வி எழுப்பினார்.

அப்போது ஆதவ் சர்ச்சைக்குரிய வகையில், காரும் இல்லை வீடும் இல்லை, ரூ 10 ஆயிரம் ரொக்கம் மட்டும் இருக்கிறது என கூறிவிட்டு ரேஞ்ச் ரோவரில் யாரும் செல்லவில்லை என்றார்.

உடனே மீண்டும் கொந்தளிப்புடன் எழுந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் ஆதவ் எதை பேசினாலும் குதர்க்கமாகவே பார்க்கிறார். எங்களுக்கு கார் வேண்டாம் என்றுதானே சொன்னோம். இதில் என்ன தவறு இருக்கிறது, எங்களுக்கு கார் இல்லை, வீடு இல்லை, 10 ஆயிரம்தான் இருக்கிறது என சொல்லியிருந்தால் கேஸ் போடுங்கள், யார் வேண்டாம் என்றது? அமைச்சர்கள் சொந்த வீட்டில் இருந்தாலும் அவர்களுக்கு தமிழக அரசு வாடகை கொடுக்கிறதே, அதை வேண்டாம் என சொல்லுங்களேன் என்றார் ஆக்ரோஷமாக! இப்படியாக கார் குறித்து அனல் பறக்கும் விவாதங்கள் சட்டசபையில் நடந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+