சென்னையில் 13 தொகுதிகளில் 'திமுக' வெல்லும் ! - வாயை விட்ட ஆதவ் அர்ஜூனா! என்னங்க நடக்குது?
சென்னை: சென்னையின் பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கம் என இரண்டு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா களமிறங்கியிருக்கின்றனர். இந்நிலையில் வெற்றி வாய்ப்பு குறித்து பேசிய ஆதவ், "சென்னையில் 13 தொகுதிகளில் திமுக ஜெயிக்கும்" என்று பேசியிருக்கிறார்.
ஏற்கெனவே வேட்பாளர் பெயர்களை மாற்றி சொல்வது, பக்கத்தில் இருக்கும் தவெக வேட்பாளருக்கு பதில், பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்பது என்று விஜய் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அந்த வகையில் தற்போது, ஆதவ் அர்ஜுனாவும் இவ்வாறு பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

சொதப்பும் விஜய்
இன்று புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த விஜய், தவெக வேட்பாளரை பக்கத்தில் வைத்துக்கொண்டு பாஜக வேட்பாளருக்கு வாக்கு கேட்டிருந்தார். புதுச்சேரியின் மணவெளி தொகுதியில் தவெக சார்பில் ராமு வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். அவருடன் பிரச்சார வாகனத்தில் வாக்கு கேட்க சென்ற விஜய், "நமது வேட்பாளர் செல்வத்துக்கு வாக்களியுங்கள்" என்று கூறினார்.
இதை சற்றும் எதிர்பார்க்காமல் ஜர்க்கான வேட்பாளர் ராமு, "என் பெயர் ராமுங்க" என்று நினைவூட்ட.. விஜய் சுதாரித்துக்கொண்டு, "ராமுவுக்கு வாக்களியுங்கள்" என்று கூறியிருந்தார். விஜய் செல்வம் என்று குறிப்பிட்ட பெயர், பாஜக வேட்பாளரின் பெயராகும். தவெகவுக்கு வாக்களிக்க கேட்க சொன்னால், பாஜகவுக்கு வாக்கு கேட்கிறாரே! என்று சலசலப்புகள் எழுந்தன. இது தொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகின.
தலைவன் எவ்வழியோ.. தொண்டனும் அவ்வழி!
புதுச்சேரியில் இப்படி நடக்க.. சென்னையில், ஆதவ் அர்ஜுனா பேசியதும் பஞ்சாயத்தை கிளப்பியிருக்கிறது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஆதவ், "ஒட்டுமொத்த வட சென்னையும், திமுகவுக்கு எதிராக மாறியிருக்கிறது. சென்னையில் 16 தொகுதிகளில் 13 தொகுதிகளில் திமுக மிகப்பெரிய அளவில் ஜெயிக்கும்" என்று கூறியிருந்தார். இதை கேட்டு ஒரு நிமிஷம் தொண்டர்கள் ஷாக் ஆகினர். இது தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
-
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
கும்பகோணத்தில் “காவலர் தேவநாதன் கையை முறித்த த.வெ.க.வினர்” என்ற செய்தியே தவறு.. காவல்துறை விளக்கம் -
அரசு மருத்துவமனையில் தந்தையை அனுமதித்து இரவு முழுவதும் தங்கிய அமைச்சர் மதன் ராஜாவுக்குப் பாராட்டு












Click it and Unblock the Notifications