Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆனி மாத ராசி பலன் 2020 : இந்த 4 ராசிக்காரங்களும் ரொம்ப கவனமா இருங்க

ஆனி மாதம் சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணியைப் பொறுத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆனி மாதம் மிதுன மாதம். இந்த மாதத்தில் மிதுனம் ராசியில் சூரியனின் பயணம் தொடங்குகிறது. சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்திராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. அதாவது, தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி. தேவர்களின் மாலை நேரப் பொழுதே மானிடர்கள் ஆகிய நமக்கு ஆனி மாதக் காலம். இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணியைப் பொறுத்து சிம்மம் முதல் கன்னி வரையிலான ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

கிரகங்களின் கூட்டணி சஞ்சாரத்தில் இந்த மாதம் மிகப்பெரிய மாற்றம் நிகழ்க்கிறது. சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசியில் உள்ள செவ்வாய் ஆனி 4 ஆம் தேதி ஜூன் 18 ஆம் தேதி மீனம் ராசிக்கு மாறுகிறார். அதே நாளில் மிதுனம் ராசியில் உள்ள புதன் வக்ரகதியில் சஞ்சரிக்கப் போகிறார். ராகு மிதுனத்தில் சூரியனோடு இணைந்திருக்கிறார்.

குரு பகவானும், சனிபகவானும் மகர ராசியில் வக்ரகதியில் சஞ்சரிக்கின்றனர். ஆனி 15ஆம் தேதி முதல் குரு மீண்டும் தனுசு ராசிக்கு வருகிறார். 11ஆம் தேதி சுக்கிரன் வக்ர கதி முடிகிறது. 28ஆம் தேதி புதன் வக்ரம் முடிவுக்கு வருகிறது. கேது தனுசு ராசியில் மீண்டும் குருவோடு இணைந்து பயணிக்கப் போகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் ராசி மாற்றங்களினால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

சிம்மம்

சிம்மம்

உங்க ராசி நாதன் சூரியன் லாப ஸ்தானத்திற்கு மாறுவது சிறப்பு. திடீர் பண வருமானம் வரும். வரவே வராது என்று நினைத்த பணம் உங்களை தேடி வரும். உங்க முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். திடீர் பணவரவினால் திக்கு முக்காடி போவீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் தொடர்பாக பேசலாம். கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அதே நேரத்தில் அவ்வப்போது சிறு சிறு வாக்குவாதங்கள் வரலாம். அலுவலகத்தில் உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும் திடீர் சலுகை கிடைக்கும். செய்யும் தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரிகளுக்கு கடையை விரிவு படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது நல்ல மாதம் அதற்கான முயற்சியில் ஈடுபடலாம். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். சில மாதங்களாக ஓய்வில் இருந்த கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடி வரும். பெண்களுக்கு வீட்டிலும் வெளியிலும் சலுகைகள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். வேலை விசயமாக செல்லும் பயணங்களால் நன்மைகள் நடைபெறும். உணவு விசயத்திலும் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள்.

கன்னி

கன்னி

உங்க ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்கிறார். உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். உங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பத்தில் சூரியன் பதவி உயர்வை கொடுப்பார். நினைத்த காரியம் நிறைவேறும். அலுவலகத்தில் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் வந்து மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பெண்களுக்கு வீட்டில் மதிப்பு மரியாதை கூடும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். நீண்ட நாட்கள் வாங்க வேண்டும் என்று நினைத்த வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண வயதில் இருக்கும் பெண்களுக்கு சுப காரிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கலாம். மாணவர்கள் உயர்கல்வியை தேர்வு செய்யும் முன்பாக பெற்றோர்கள் ஆலோசனையை பெறுவது அவசியம். உறவினர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். மனதிலும் உடலிலும் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். குல தெய்வ வழிபாடு செய்யுங்கள் பாதிப்புகள் நீங்கி நன்மை நடைபெறும்.

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் நீங்கும். பணவரவு நன்றாக இருக்கும். கடன் சுமைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். வீட்டிற்கு உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். இந்த மாதம் உங்களுக்கு சுபமான மாதம் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். மகிழ்ச்சிகரமான செய்திகள் தேடி வரும். பணம் எவ்வளவு வந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உங்களை தேடி வரும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. உயர்கல்வி படிப்பில் சில தடைகள் வரலாம் ஆசிரியர்களின் ஆலோசனை அவசியம். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். வியாபாரிகளுக்கு முன்னேற்றமும் லாபமும் அதிகரிக்கும். நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடாமல் சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சூரியன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருக்கவும். பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. பண வரவு அதிகரிக்கும் கூடவே சுப செலவுகளும் வரும். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். சில பிரச்சினைகளால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேரும் நேரம் வந்து விட்டது. கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் தீரும். தம்பதியர் இடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் வரும். அதே நேரத்தில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்படும் விட்டுக்கொடுத்து போங்க. பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனமாக இருங்க. சிலருக்கு புத்திய பாக்கியம் கை கூடி வரும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் நடைபெறும். நல்ல செய்திகள் தேடி வரும். பெண்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவை. வீட்டிற்குத் தேவையான பணம் கிடைப்பதால் மன நிறைவு ஏற்படும். பணம் நகைகள் விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். வாய்ப்புகள் திடீரென கை நழுவிப்போவதால் சில நேரங்களில் மன உளைச்சலை ஏற்படுத்தும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+