வாரே.. வா.. இப்படிதான் நடக்கப் போகுதா.. ஆரியைச் சுற்றி "மய்யமிடும்" அரசியல்!.. சபாஷ் சரியான தேர்வு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளரான ஆரி அர்ஜுனன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து பணியாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு அவர்களது ரசிகர்களிடையே மேலோங்கி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்று தற்போது இறுதியாக 7 போட்டியாளர்கள் உள்ளனர். அவர்களில் நாளை ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார்.

இதையடுத்து மீதமுள்ள 6 பேரில் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே ரம்யா, பாலா, ஆரி இவர்களில் 3 பேரில் ஒருவர் நிச்சயம் வெல்வார் என சொல்லப்பட்டது.

ஆரியிடம் எகிறும் பாலா

ஆரியிடம் எகிறும் பாலா

ஆனால் அண்மைக்காலமாக ஆரி கூறும் நியாயமான விஷயங்களை ஏற்க மறுத்து ரவுடி போல் பாலா செயல்படுகிறார். எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை போல ஆரியிடம் எகிறும் பாலாவுக்கு ஆதரவாக ரம்யா பாண்டியன் பேசி வருகிறார். ரம்யா பாண்டியனின் முகத்திரையை கமல்ஹாசனே கடந்த எபிசோட்களில் கிழித்தெறிந்தார்.

பேட்டை ரவுடி

பேட்டை ரவுடி

பாலா ஏதோ பேட்டை ரவுடி போல் பேசிவருகிறார். இத்தனை கோடி மக்கள் பார்க்கிறார்கள் என்ற அச்சம் இல்லாமல் ஷிவானியிடம் ஜொல்லு விடுவது போன்ற ஒவ்வாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். ஹவுஸ்மேட்ஸ்களின் உறவினர்கள் வந்து சென்றபோது வெளியே ஆரிக்கு இருக்கும் ஆதரவை சொல்லியுள்ளார்கள்.

டார்கெட்

டார்கெட்

அதிலிருந்து விஷம் ரம்யா பாண்டியனும், பாலாவும் ஆரியை டார்கெட் செய்து வருகிறார்கள். இதனால் ஆரிதான் டைட்டில் வின்னர் ஆவார் என்பது அனைவரின் கணிப்பாகும். இந்த நிலையில் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஒரு ஊரில் அவர் பேச தொடங்கியதும் அங்கிருந்த இளைஞர்கள் ஆரி ஆரி ஆரி... என கோஷமிட்டனர்.

பிக்பாஸ் பிக்பாஸ்

பிக்பாஸ் பிக்பாஸ்

பின்னர் பிக்பாஸ் பிக்பாஸ் பிக்பாஸ் என கோஷமிட்டனர். இதுவரை எந்த ஒரு போட்டியாளருக்கும் இல்லாத ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது. ஆரியிடம் நல்ல குணங்கள் இருக்கின்றன. பெண்களை மதிக்கும் செயலும் உள்ளது. பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்கிறார். அர்ச்சனா, ரியோ, சோமு போல் குரூபிஸம் செய்து கொண்டு தனக்கு வந்தா ரத்தம், எதிராளிக்கு வந்தா தக்காளி சட்டினி என இல்லாமல் யார் தவறு செய்தாலும் தட்டி கேட்கிறார்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்


கமல்ஹாசனும் தனது கட்சிக்கு நேர்மையான தப்பை தட்டிக் கேட்கும், பாரபட்சம் காட்டாத நபர் உறுப்பினராக கிடைத்தால் லட்டு போல் அள்ளிக் கொள்வார். ஆரிக்கு இளைஞர்கள் செல்வாக்கு இருக்கிறது. எனவே சினேகிதனை போல் ஆரியையும் தனது கட்சியில் கமல்ஹாசன் தனது கட்சியில் சேர்த்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+