குதித்து குதித்து டான்ஸ் ஆடி.. திணறடிக்கும் ஷிவானியின் காதல்.. இன்றும் கிளம்பிய பஞ்சாயத்து!
ஷிவானி, பாலா இடையே இருப்பது காதலா என்ற கேள்வி எழுந்தபடியே உள்ளது
சென்னை: எத்தனை புரோமோக்கள் வந்தாலும், அதில் ஷிவானி சம்பந்தப்பட்ட புரோமோ என்றாலே அவரது ரசிகர்கள் ஜில்லென்று ஆகிவிடுகிறார்கள்.. இன்றும் ஷிவானியை வைத்துதான் ஒரு புரொமோ வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு நாள் புரோமோக்களும் வெளிவந்தாலும், ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அதிகமாக பதிவிடுவது ஷிவானி, ரம்யா பாண்டியன், கேபியின் நச் போட்டோ, வீடியோக்களைதான்.. அதிலும் ஷிவானி காலையில் பாட்டை போட்டதும் குதித்து குதித்து ஆடும் டான்சுக்கு ஏகப்பட்ட இளசுகள் பட்டாளம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

எந்த பிக்பாஸ் சீசனிலும், ஏதாவது ஒரு ஜோடிக்கு லவ் வந்துவிடுகிறது.. ஆரம்பத்தில் ஓவியாவுக்கு ஏற்பட்ட நிஜமான காதல்தான் இதற்கு ஆரம்ப புள்ளி. அவர் மனசார காதலித்தாலும், அந்த காதல் அப்போது கைகூடவில்லை.. அதே டெக்னிக்கை அதற்கு பின்னரும் வந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் கையில் எடுத்தனர்..
காதல் இருக்கிறதோ இல்லையோ, இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி கொண்டனர்.. இதனால் இவர்கள் பிரபலமானதுடன், அதிகமாக ரசிகர்களால் பேசப்படுகின்றனர்.. கவனமும் சுண்டி இழுக்கப்படுகிறது.. அதிக அளவில் புரோமோவில் லவ் ஜோடியே பிரதான இடத்தையும் பிடித்து வருகிறார்கள். இதில் சக்ஸஸ் ஆனவர்கள்தான் கவினும், லாஸ்லியாவும்!
அந்த வகையில் இந்த முறை பாலா - ஷிவானி லவ் ஓடிக் கொண்டிருக்கிறது... இது காதல் இல்லை என்று பலமுறை சத்தமாக சொல்லிவிட்டாலும், கொஞ்சுவதும், கெஞ்சுவதும், பதறுதுவதும், சிணுங்குவதும் குறைவில்லாமல் நடந்து கொண்டுள்ளது.. காதல் கண்ணை மறைக்குது என்ற குற்றச்சாட்டு வெளியாகிய பின்னரும் தொடர்கிறது.. ஷிவானியும் வேண்டுமென்றே, பிக்பாஸ் வீட்டில் தாக்குபிடிக்க காதல் இருப்பது போல நடித்து கொண்டிருக்கிறாரா என்றும் தெரியவில்லை.
"பாலா மீது நீங்க வச்சிருக்கிறது அன்பா? காதலா?" என்று ஷிவானியிடம் கேட்கிறார் ஆரி.. இதுதான் இன்றைக்கு பஞ்சாயத்து என்பதும் தெரிந்துவிட்டது.. ஆரியின் கேள்விக்கு ஷிவானி என்ன சொல்ல போகிறார் என்று தெரியவில்லை.. ஆனால் என்ன சொன்னாலும், அதை வைத்து பாலாஜி ஒரு சண்டையை கிளப்புவார்என்று மட்டும் தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications