ஆருத்ரா மோசடி! ஆர்.கே.சுரேஷிடம் இன்றும் விசாரணை! குறி வச்சாச்சு எற விழுமா? சிக்க போவது யார்?
சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நடிகரும் பாஜக நிர்வாகியுமான ஆர்.கே. சுரேஷிடம் இன்று 2 ஆவது நாளாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்துகிறார்கள்.
ஆருத்ரா மோசடி வழக்கில் நடிகரும் பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அவருடைய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவருக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

அவருடைய செல்போனும் ஸ்விட்ச் ஆப்பில் இருந்தது. இதனால் அவர் துபாய் தப்பி சென்றுவிட்டதாக தெரியவந்தது. இதையடுத்து அவரை காணவில்லை என ஏப்ரல் மாதம் லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் தான் தனது குடும்பத்தினருடன் துபாயில் இருப்பதால் தன்னால் நேரில் ஆஜராக முடியாது என நீதிமன்றத்தில் சுரேஷ் தெரிவித்திருந்தார்.
ஆனால் நீதிமன்றம் உத்தரவின் பேரில் லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்த பிறகு 7 மாதங்கள் கழித்து ஆர்.கே.சுகேஷ் சென்னை வந்துள்ளார். அவர் அசோக் நகரில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் ஏடிஎஸ்பி வேல்முருகன் முன்பு நேற்று ஆஜரானார். அவர் ஆஜராக வந்த போது செய்தியாளர்களிடம் கூறுகையில் நான் தலைமறைவாக இல்லைங்க. விசாரணையை முடிச்சிட்டு வந்து பேசறேன் என உள்ளே சென்றார்.
4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அவர் வேறு யாருடைய பெயரையாவது சொன்னாரா, வேறு என்னென்னலாம் சொன்னார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் ஆர்.கே.சுரேஷிடம் இன்றைய தினமும் விசாரணை நடத்தப்படுகிறது. காவல் துறை கேட்ட சில ஆவணங்களை இன்று ஒப்படைப்பதாகவும் விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் , தனக்கும் ஆருத்ரா மோசடிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் அந்த முக்கிய ஆவணங்களில் என்ன இருக்கிறது, யாராவது சம்பந்தப்பட்டிருக்கிறார்களா, பெரிய தலைகளுக்கு தொடர்புண்டா உள்ளிட்ட விஷயங்கள் தெரியவில்லை. ஒரு வேளை ஆர்.கே.சுரேஷை ரூசோ காட்டி கொடுத்தது போல் இவரும் வேறு யாரையாவது கை காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பின்னணி என்ன? சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயமுத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற பெயரில் ஆருத்ரா தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இங்கு ரூ 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ 36 ஆயிரம் வரை வட்டியாக வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது. இதை பலரும் நம்பி அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் அந்த நிறுவனமோ 1,09,255 பேரிடம் ரூ 2,438 கோடி வரை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 10-க்கும் மேற்பட்டோரை அடுத்தடுத்து கைது செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக அந்த நிறுவனத்திற்கு சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ 96 கோடி முடக்கப்பட்டது. ஆருத்ரா நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 125 க்கும் மேற்பட்ட சொத்துகளும் முடக்கப்பட்டன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications