நீங்க போலி சாமியாரா? நிருபர்கள் கேட்ட கேள்வி.. அவசரமாக பாதியில் கிளம்பிய அன்னபூரணி.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை கமிஷ்னர் அலுவலகம் முன் இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்னபூரணி பல்வேறு கேள்விகளுக்கு பரபரப்பு பதில்களை வழங்கினார்.
Recommended Video
ஆதிபராசக்தி அம்மாவின் அவதாரம் என்று தன்னை விளம்பரப்படுத்தி வரும் அன்னபூரணி தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இவர் ஜனவரி 1ம் தேதி அருள் தரப்போவதாக செங்கல்பட்டில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி போலீசார் மூலம் தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில் தனக்கு செல்போன் மூலமும், வாட்ஸ் ஆப் மூலமும் நிறைய பேர் தொந்தரவு கொடுப்பதாகவும், கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் இன்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் அன்னபூரணி புகார் அளித்தார்.

அன்னபூரணி
இந்த நிலையில் இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அன்னபூரணி, என்னை பற்றி தவறான அவதூறுகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பட்டு வருகிறது. என்னை பற்றி தவறாக பேசுகிறார்கள். அதனால் புகார் கொடுக்க வந்தேன். என்னை போலி சாமியார். சாமியார் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

ஆன்மீகம் அன்னபூரணி
நான் ஆன்மீக பயிற்சி அளிக்கவே இங்கு வந்துள்ளேன். பலருக்கு தீட்சை கொடுத்துள்ளேன். ஆன்மீக பணிதான் என் வேலை. இதுதான் என் வேலை. என்னிடம் தீட்சை வாங்கியவர்களுக்கு அது தெரியும். என்னை உணர்ந்தவர்களுக்கு அது தெரியும்.

அன்னபூரணி ஆதிபராசக்தி
வெறுமனே பார்க்கும் நபர்களுக்கு தெரியாது என்று அன்னபூரணி தெரிவித்தார். இதையடுத்து உங்களை போலி சாமியார் என்று சொல்கிறார்களே என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த அன்னபூரணி, நான் சாமியார் என்று சொல்லவே இல்லையே.

நான் சாமியார் இல்லை
உங்கள் கேள்விக்கு எல்லாம் தேவைப்படும் சூழ்நிலையில் பதில் அளிக்கிறேன். என் மீது புகார் கொடுக்கப்பட்டதாக வரும் செய்திகள் குறித்து என்னிடம் தகவல் எதுவும் வரவில்லை. ஆதிபராசக்தி என்று நான் சொல்லவில்லை. என்னை நானே இப்படி சொல்லிக் கொள்ளவில்லை.

நான் கடவுள்
நான் என்னை கடவுள் என்று கூறவில்லை. என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் என்னை அப்படி உணர்ந்து இருக்கிறார்கள். உணர்ந்தவர்கள் அந்த வார்த்தையை வெளிப்படுத்தி உள்ளனர். நான் எந்த அருள் வாக்கும் கொடுக்கவில்லை. நான் ஆன்மீகம் என்றால் என்ன என்று உணர்த்துவேன். அதுவே என் பணி.

பாதியில் வெளியேறிய அன்னபூரணி
மக்களை எது இயக்குகிறது. ஆன்மீகம் எப்படி இருக்கும் என்று கூறுவேன். ஆன்மீக பயிற்சிதான் அளிக்கிறேன் என்று கூறினார். இதையடுத்து அங்கு இருந்த நிருபர்கள், நீங்கள் ஆன்மீக பயிற்சி வழங்குகிறீர்கள் என்றால் அது என்ன ஆன்மீக பயிற்சி.. பயிற்சியில் என்ன சொல்வீர்கள்.. என்ன செய்வீர்கள்.. காலில் விழுவது தானா ஆன்மீக பயிற்சி என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்க முடியாத அன்னபூரணி அங்கிருந்து அப்படியே பாதியில் பேச்சை முடித்துக்கொண்டு அவசரமாக கிளம்பினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications