காலை 6 மணிக்கு வரவேண்டிய ஆவின் பால்.. மதிய உணவு நேரத்திற்கு விநியோகம்.. சென்னை மக்கள் 2 நாளாக அவதி
சென்னை: சென்னையில் கடந்த இரு தினங்களாக ஆவின் பால் விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி பால் உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் காரணமாக ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் அளவு குறைந்தது.
இதனால் பொது மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடர்ந்ததால் பால் உற்பத்தியாளர்கள் தனியாரிடம் பால் விற்க முன்வருவார்கள். இதனால் ஆவின் நிறுவனம் நலிவடைய வாய்ப்புள்ளது என்றும் பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

சோழிங்கநல்லூர்
இந்த நிலையில் சென்னை சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் கடந்த இரு தினங்களாக பால் சப்ளை செய்வது தாமதமானது. அது போல் முகப்பேர், அம்பத்தூர் பகுதிகளிலும் பால் விநியோகம் தாமதமானது. தினமும் சுமார் காலை 6 மணிக்கு விநியோகம் செய்யப்படும் பால், பகல் 12 மணிக்குத்தான் வீடுகளுக்கு கொண்டு வரப்பட்டன.

காபி டீ குடிக்க முடியவில்லை
காலையில் காபி, டீ குடிக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். இது குறித்து பால் விநியோகம் செய்தவர்களுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வெளிமாவட்டங்களில் இருந்து வர வேண்டிய பால் வரத்து குறைந்ததன் காரணமாக உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பால் பண்ணையில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட வேண்டிய பால் வேன்கள் காலதாமதமாக சென்றதால் ஆவின் அட்டைதாரர்கள் சிரமமடைந்தனர்.

சோழிங்கநல்லூர்
சோழிங்கநல்லூரில் ஆவின் பால் பண்ணையில் பாலை பாக்கெட் செய்ய போதுமான இயந்திரங்கள் இல்லை. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அது போல் கடந்த சில தினங்களாக பால் பாக்கெட்டில் பால் பாக்கெட் நாள் என்ற இடத்தில் அடுத்த நாளுக்கான தேதி இருந்தது.

தேதியிலும் மாற்றம்
பொதுவாக தினமும் விநியோகிக்கப்படும் பாலில் அன்றைய தேதியே இருக்கும். ஆனால் நேற்று மார்ச் 30 ஆம் தேதி விநியோகம் செய்யப்பட்ட பாலில் மார்ச் 31 என இருந்தது. இதுவும் பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தின. அம்பத்தூரில் ஆவின் பால் விநியோகம் தாமதம் காரணமாக இரு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications