காலை 6 மணிக்கே பால் காலி? தமிழகத்தில் தீவிரமடையும் ஆவின் பால் தட்டுப்பாடு.. பொதுமக்கள் அவதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக ஈரோடு, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்த பிரச்சினை தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் ஆவின் பால் தான் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. பல தனியார் நிறுவனங்களும் பாலை விற்பனை செய்தாலும், அதை விட ஆவின் பால் விலை கணிசமாக குறைவு என்பதால் ஏழை மற்றும் மிடில் கிளாஸ் மக்களின் முதல் சாய்ஸ்கா ஆவின் பால் தான் இருக்கிறது. அப்படியிருக்கும் போது, மாநிலத்தில் பல இடங்களில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Aavin Milk Shortage in Tamil Nadu

பற்றாக்குறை

ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 120 ஆவின் முகவர்கள் மூலம் தினமும் சராசரியாக 48,000 லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்தில் இது 43,000 லிட்டராகக் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் சுமார் 5,000 லிட்டர் பால் பற்றாக்குறை ஏற்படுவதாக முகவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் தாக்கம் சப்ளையில் தெளிவாக தெரிகிறது. வழக்கமாக காலை 9 மணி வரை ஆவின் பால் கிடைக்கும் பூத்துகளில், தற்போது காலை 6 மணிக்கே பால் முழுவதுமாக விற்றுத் தீர்ந்து விடுவதாக மக்கள் கூறுகின்றனர். ஈரோடு மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் இதே நிலை தான் இருப்பதாக சொல்லப்படுகிறது.

சிரமம்

வீட்டில் குழந்தைகளை வைத்திருப்போர் இதனால் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். பால் வாங்க ஒவ்வொரு நாளும் அலைய வேண்டி இருப்பதாக பொதுமக்கள் புகாரளிக்கிறார்கள். குறிப்பாக, ஆவின் ஆரஞ்சு நிற "ஆவின் கோல்ட்" பாக்கெட் கிடைப்பதே இல்லை என்றும் பெரும்பாலான இடங்களில் பச்சை நிற பாக்கெட் மட்டுமே கிடைப்பதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.

அதிகரிக்கும் செலவு

வாங்கி போட்டால் பல வாரங்கள் இருக்கும் என்பதற்கு பால் என்பது மற்ற மளிகை பொருட்களை போல இல்லை. தினமும் பால் வாங்க வேண்டிய நிலையில், ஒரு பூத்தில் பால் கிடைக்கவில்லை என்பதால் மற்றொரு பூத்தை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆவின் பால் கிடைக்காததால் பலரும் தற்போது தனியார் நிறுவனங்களின் பாலை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், தனியார் பால் கூடுதல் விலை என்பதால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாதாந்திர செலவு கணிசமாக அதிகரிக்கிறது.

கமிஷன் தொகை

இது தொடர்பாக ஆவின் முகவர்கள் கூறுகையில், "தனியார் பால் நிறுவனங்கள் விவசாயிகளிடம் கூடுதல் விலை கொடுத்து பாலை கொள்முதல் செய்வதால், ஆவின் கூட்டுறவு சங்கங்களுக்கு வரும் பாலின் அளவு குறைந்துள்ளது. இதுவே பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கடந்த 16 ஆண்டுகளாக தங்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகை உயர்த்தப்படவே இல்லை. பெட்ரோல் உள்ளிட்ட விநியோக செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதையெல்லாம் கருத்தில் கொண்டு கமிஷன் தொகையை அதிகரிக்க வேண்டும்" என்றார்.

ஆவின் பால் என்பது தமிழக மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருப்பதால், தட்டுப்பாடு பிரச்சினைக்கு தமிழக அரசும் பால்வளத்துறையும் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் முகவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+