விஜய்க்கு அடுத்த சிக்கல்.. ஆவினுக்கு இனி பால் சப்ளை கிடையாது! போர்க்கொடி தூக்கும் உற்பத்தியாளர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக ஆவின் பாலுக்கும் லிட்டருக்கு ரூ.50 வழங்க கோரி, வரும் 24ம் தேதி முதல் தமிழக முழுவதும் ஆவினுக்கு பால் வழங்கப்போவதில்லை என பால் உற்பத்தியாளர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால்ம், தமிழகம் முழுவதும் ஆவின் பால் வினியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு அண்மையில் சட்டப்பேரவையில் அறிவித்த பால் கொள்முதல் விலை உயர்வு போதுமானதாக இல்லை எனவும், தனியார் நிறுவனங்களுக்கு இணையாக லிட்டருக்கு ₹50 வழங்கக்கோரி வரும் ஆகஸ்ட் 24 ம் தேதி முதல் ஆவினுக்குப் பால் வழங்குவதை நிறுத்தித் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாகவும் பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கூறுகையில்.. தமிழக முதல்வர் விஜய், சமீபத்தில் சட்டப்பேரவையில் பால் விலை அறிவித்ததை வரவேற்கிறோம், ஆனால் வருத்தமும் தெரிவிக்கிறோம்.

Aavin milk milk producers

ஆவின் பால்

சென்ற அரசு செய்த தவறு 4.2 கொழுப்புச் சத்து, 8.3 இதர சத்து கொண்ட பாலுக்கு 35 ரூபாய் கொள்முதல் விலை அறிவித்தார்கள். ஆனால் எந்த விவசாயிகளுக்கும் அது கிடைக்கவில்லை., காரணம், பாலில் 4.0 கொழுப்புச் சத்தும், 8.0 இதர சத்தும் உள்ளது. அதற்கு 32 ரூபாய்தான் விலை கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதனோடு 3 ரூபாய் சேர்த்து 35 ரூபாய் தான் எங்களுக்கு விலை கொடுத்தார்கள். இந்த விலை கட்டுப்படியாகவில்லை என்று தான் தற்போது 10 லட்சம் லிட்டர் ஆவினுக்கு வழங்க வேண்டிய பால் தனியாருக்கு போய்விட்டது. தனியார் நிறுவனம் ஒரு லிட்டர் பால் 50 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறார்கள்.

பால் உற்பத்தியாளர்கள்

அந்த நிலையிலே ஆவினும் 4.0,கொழுப்பு சத்து கொண்ட 1 லிட்டர் பாலுக்கு 50 ரூபாய் விலை கொடுத்தால்தான் இனி ஆவினுக்கு பால் கொடுக்க முடியும். அரசு அதிகாரிகள் முதல்வரை தப்பாக வழிநடத்தி தப்பான அறிவிப்பை கொடுக்க வைத்துவிட்டார்கள். எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. நாங்கள் கொண்டுவந்த தமிழக அரசுக்கு தப்பான அறிவிப்பை அதிகாரிகள் கொடுக்க வைத்துவிட்டார்கள். திமுக.,வை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் எவ்வளவோ பாடுபட்டு தமிழகம் முழுவதும் சுற்றினோம்.

தனியாருக்கு பால்

ஆனால் இப்போது இருக்கிற அரசையே குறைகூறுகின்ற அளவுக்கு அதிகாரிகள் செயல்படுகிறார்கள். அதை மாற்ற வேண்டும். வரும் 24-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள், பால் விலை கட்டுப்படியாகவில்லை என்றும், முதல்வர் அறிவித்த அறிவிப்பு போதுமானதாக இல்லை என்றும் கூறி, பால் உற்பத்தியாளர்கள் தனியாருக்கு பால் அனுப்புகின்ற ஒரு போராட்டத்தை அறிவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

ஆகஸ்ட் 24 போராட்டம்

ஆகவே, வருகின்ற 24ம் தேதியிலிருந்து ஆவினுக்கு பால் வழங்க முடியாது. எங்களது பாலை நாங்களே பயன்படுத்திக்கிறோம். அரசு ஒரு லிட்டருக்கு 50 ரூபாய் அறிவித்தால் மட்டுமே ஆவினுக்கு பால் வரும் என்றார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 25 அயிரம் லிட்டர் ஆவினுக்கு பால் வழங்கி வந்த நிலையில் தற்போது 50 சதவீதம் குறைந்து விட்டது. அனைவரும் தனியாருக்கு பால் வழங்க சென்று விட்டனர். தீவன விலை மற்றும் புண்ணாக்கு விலை உயர்ந்துவிட்டது, மழை மற்றும் புல் இல்லாத சூழலில் பாலும் வரவில்லை. ஆவினுக்கு ஊற்றுவதால் லிட்டருக்கு ₹20 வரை நஷ்டம் ஏற்படுகிறது; 10 லிட்டர் பாலுக்கு ₹200 வரை இழப்பு ஏற்படுகிறது. ஆவின் நன்றியுடன் இல்லாததால் வரும் 24ம் தேதி முதல் ஆவினில் இருந்து விடைபெறுகிறோம்" என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+