ஜிஎஸ்டி வரி குறைப்பு! பன்னீர், நெய் விலையை குறைத்தது ஆவின்! ஒரு கிலோ Ghee எவ்வளவு?
சென்னை: ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பிறகு ஆவின் பொருட்களான நெய், பன்னீர் ஆகியவற்றின் விலையை அந்த நிறுவனம் குறைத்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் பால் விலையை குறைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பால் பொருட்களுக்கு 12 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரி தற்போது இன்று முதல் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசு என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா உரையில் அறிவித்திருந்தார்.

இத்தனை ஆண்டுகளாக 4 பிரிவுகளாக இருந்த ஜிஎஸ்டி வரியை தற்போது 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் ஆகிய இரு விகிதங்களில் மட்டுமே வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதிலும் பதப்படுத்தப்பட்ட பால் வகைகள், தயிர், லஸ்ஸி, பன்னீர் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வெண்ணெய், நெய், சீஸ், ஐஸ்கிரீம் ஆகிய கொழுப்பு மிக்க பால் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அமுல், நந்தினி போன்ற பிற மாநிலங்களின் பொதுத் துறை நிறுவனங்கள், மதர் டைரி உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் விலையைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. நெய் போன்ற பொருட்களின் விலை லிட்டருக்கு ரூ 25 முதல் 40 குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனமான ஆவின் இதுவரை விலைக் குறைப்பு அறிவிப்பை வெளியிடவில்லை.
இதற்கு அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலியாக ஆவின் நெய், பன்னீர் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது முன்பு பன்னீர் அரை கிலோ 300-க்கு விற்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரூ 275-க்கு விற்பனை செய்யப்படும். அது போல் பன்னீர் 200 கிராம் ரூ 120க்கு விற்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் ரூ 110-க்கு விற்பனை செய்யப்படும்.
அது போல் நெய் 1 லிட்டர் ரூ 700-க்கு விற்கப்பட்டிருந்த நிலையில் ரூ 660-க்கு இனி விற்கப்படும். அது போல் நெய் 50 மில்லி நேற்று வரை 48 ரூபாய்க்கும் இன்று முதல் 45 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அரை லிட்டர் நெய் ரூ 365 என நேற்று விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ 345 -க்கு விற்பனை ஆகிறது.
அது போல் நெய் 5 லிட்டர் டின் 3600 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது ரூ 3250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நெய் 15 கிலோ டின் விலை ரூ 11880-ஆக இருந்த நிலையில் தற்போது ரூ 10,725-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பால் விலை குறைந்ததா என்பது தெரியவில்லை. அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பால் விலை குறைக்காததற்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications