ஆவின் இனிப்புகள் தள்ளுபடியில் விற்பனை.. தீபாவளியை ஆவின் ஸ்வீட்ஸ் உடன் கொண்டாடுங்கள்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் நிறுவனம் தள்ளுபடி விலையில் இனிப்புகளை விற்பனை செய்யவுள்ளது. ரூ.300, ரூ.500, ரூ.900 ஆகிய 3 விலைகளில் தள்ளுபடி முறையில் ஆவின் நிறுவனம் இனிப்புகளை விற்பனை செய்யவுள்ளது. பண்டிகை என்றாலே பலகாரம்தான் ஆவின் ஸ்வீட்ஸ் உடன் தீபாவளியை கொண்டாடுங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பால் மற்றும் பால் உபபொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலை மற்றும் சிறந்த தரத்தோடு வழங்கிவரும் ஆவின் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் தமிழகத்தின் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது.

ஆவின் தனது பால் உபபொருட்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா, மைசூர்பாகு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, லஸ்ஸி, மோர், சாக்லேட் மற்றும் ஐஸ் கிரீம் போன்ற பால் பொருட்களை தரமான முறையில் உற்பத்தி செய்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்யப்பட்ட ஆவின் இனிப்பு வகைகள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும் கீழ்க்கண்ட தரமான சிறப்பு இனிப்பு வகைகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
நெய் பாதுஷா - 250 கிராம் - ரூ.190, நட்ஸ் அல்வா - 250 கிராம் - ரூ.190, மோத்தி பாக் - 250 கிராம் - ரூ.180,காஜு பிஸ்தா ரோல் - 250 கிராம் - ரூ.320
காஜு கட்லி - 250 கிராம் 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் இனிப்பு வகைகள் அனைத்தும் அக்மார்க் தரம் பெற்ற ஆவின் நெய்யால் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் இனிப்புகளாகும். மேற்படி இனிப்பு வகைகள் அனைத்தும் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி முதல் அனைத்து ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே ஆவின் நிறுவனம் தள்ளுபடி விலையில் இனிப்புகளை விற்பனை செய்யவுள்ளது. ரூ.300, ரூ.500, ரூ.900 ஆகிய 3 விலைகளில் தள்ளுபடி முறையில் ஆவின் நிறுவனம் இனிப்புகளை விற்பனை செய்யவுள்ளது. மைசூர்பாகு 250 கிராம், மிக்சர் 200கிராம், பிஸ்கட் 80கிராம் உள்ளிட்டவை ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. நெய் பாதுஷா 250கிராம், பாதாம் மிக்ஸ் 200கிராம், குலாப் ஜாமூன் 200கிராம் உள்ளிட்டவை ரூ.500க்கு விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு தேவைப்படும் இனிப்பு வகைகள் ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து வாங்கிப் பயன்பெறலாம். மேலும் சிறு குறு நிறுவனங்கள், தனியார் பெரு நிறுவனங்கள், அரசுத் துறை சார்ந்த நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு தேவையான இனிப்பு வகைகள் கீழ்கண்ட முகவரி மற்றும் தொலைபேசியை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
முகவரி: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், 6வது தளம், விற்பனைப் பிரிவு,கூட்டாண்மை அலுவலகம், நந்தனம், சென்னை - 35
தொலைபேசி எண்கள்: 9444915453,7358018394, 7358018392, 7358018390
தீபாவளி பண்டிகை முன்னிட்டு, இனிப்பு, கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனையை 20 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் சு.வினீத் தெரிவித்துள்ளார். தற்போது, ஆயுதபூஜை நிறைவடைந்துள்ள நிலையில், ஆவின் பொருட்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் சு.வினீத், ஆவின் நிறுவனம் சார்பில் பால் உபபொருட்களான வெண்ணெய், நெய், பால்கோவா, மைசூர் பாகு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, லஸ்சி, மோர், சாக்லெட், தயிர் மற்றும் ஜஸ் கிரீம் போன்ற பால் பொருட்களை தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனை செய்து வருகிறது.
இதுதவிர, பண்டிகை காலத்தில் இனிப்புவகைகள், கார வகைகள் தயாரித்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயுதபூஜையை ஒட்டி, ஆவின் பொருட்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது எங்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குகிறது. இதை முன்னிட்டு, ஆவின் பால் பொருட்களுடன் இனிப்பு வகைகள், கார வகைகள் ஆகியவற்றின் விற்பனையை கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது, சேலம், கோவை, மதுரை, திருவண்ணாமலை, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தயாரிப்பு பணி நடைபெறுகிறது. தனியார் நிறுவனம், பொதுத்துறை நிறுவனங்கள், அதிகாரிகள் குடியிருப்புகளில் ஆவின் பொருட்களை வாங்க முன்பதிவு செய்து வருகின்றனர். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப ஆவின் பொருட்களை வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றும் வினீத் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications