பச்சை பால் பாக்கெட்டில் புது வெரைட்டி.. வைட்டமின் செறிவூட்டப்பட்ட பாலை அறிமுகம் செய்யும் ஆவின்!
சென்னை: வைட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்ட புதிய வகை பால் பாக்கெட்டுகளை அறிமுகம் செய்யவுள்ளது ஆவின் நிறுவனம். "கிரீன் மேஜிக் ப்ளஸ்" என்ற பெயரில் புதிய பால் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஆவின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை மேற்கொண்டு வருகிறது. பண்டிகை காலங்களில் சிறப்பு இனிப்பு வகைகளையும் ஆவின் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், வைட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்ட புதிய வகை பால் பாக்கெட்டுகளை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.

இது குறித்து ஆவின் சார்பில் அதன் மேலாண் இயக்குநர் சு.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 31 லட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள் பொதுமக்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களிள் தேவையை அறிந்து ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பால் மற்றும் பால் உபப்பொருட்களின் தேவை மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளதால், விற்பனை நிலையங்களை அதிகரிக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மற்றும் சுற்றுலாப் பகுதிகளிலும் ஆவின் பாலகம் அமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அவ்வப்போது ஆவின் நிறுவனம் பல்வேறு புதிய பால் மற்றும் பால் உபப்பொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்பவும், ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் வைட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்ட புதிய வகை கிரீன் மேஜிக் ப்ளஸ் பால் காஞ்சிபுரம்- திருவள்ளூர், கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஒன்றியங்களில் 18.12.2024 முதல் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் பச்சை நிற பாக்கெட் பாலில் 4.5 சதவீத கொழுப்புச் சத்து, அதே 9 சதவீத கொழுப்பு அல்லாத திடப்பொருள்கள் கொண்ட பால் ஏற்கனவே விற்பனையில் உள்ளது. அதோடு, வைட்டமின் செறிவூட்டப்பட்டு ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் என்ற பெயரில் விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications