விரைவில் ரேஷனில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை.. தமிழக அரசு அதிரடி முடிவு! என்னவெல்லாம் விற்கப்படும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் ரேஷனில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆவின் பால் பொருட்களை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சிறிய வகை பாக்கெட்டுகளில் ஆவின் நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது என்று பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார் .

ரேஷனில் என்ன மாதிரியான ஆவின் பொருட்கள் கிடைக்கும் என்று விரைவில் லிஸ்ட் வெளியாகும். தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, எண்ணெய் மற்றும் மற்ற பொருட்கள் அனைத்தும் ஸ்டாக் நிரப்பப்பட்டு உள்ளது. கடந்த சில வாரங்களாக தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் மீண்டும் ஸ்டாக் கொண்டு வரப்பட்டு உள்ளது.

ration

தட்டுப்பாடு நீக்கப்பட்டு உள்ளது. 10 சதவிகித கடைகளில் மட்டுமே தற்போது தட்டுப்பாடு உள்ளது. விரைவில் அதுவும் சரி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமோலின் ஆயில் ஆகியன தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக கொள்முதல் செய்து 355 கிடங்குகளில் இருப்பில் வைத்து 36,578 நியாய விலை அங்காடிகளின் மூலம் 2,23,86,333 குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

அரிசி திருட்டு: உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீது, இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் -1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

நடவடிக்கை; தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி விற்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பாக முக்கியமான சில தகவல்களை வெளியிட்டு உள்ளது. இதை தடுப்பதற்காக முக்கியமான திட்டம் ஒன்றையும் கையில் எடுத்துள்ளது.

இதற்காக இனி ஜிபிஎஸ் உடன் கூடிய இ-வழித்தடம் அமைக்கப்படும். இந்த வழித்தடத்தில் மட்டும் வாகனங்கள் செல்ல வேண்டும். வாகனங்கள் கண்காணிப்பு, ஜிபிஎஸ் மூலம் செயல்படுத்தப்படும் லாக் உள்ளிட்ட வசதிகள் கொண்டு வரப்பட உள்ளன.

மேலும், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம், 1980-ன் படி அவ்வப்போது தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 01.07.2023 முதல் 31.07.2023 வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ.49,40,516/- (ரூபாய் நாற்பத்தொன்பது லட்சத்து நாற்பதாயிரத்து ஐந்நூற்று பதினாறு மட்டும்) மதிப்புள்ள 3610 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, 181 எரிவாயு உருளைகள், 1161 கிலோ கோதுமை, 1710 கிலோ துவரம்பருப்பு, 2140 லிட்டர் மண்ணெண்ணெய், 36 பாக்கெட் பாமாயில் ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன.

அதிகரிப்பு: இந்த நிலையில் சமீப நாட்களாக தமிழ்நாட்டில் அரிசி திருட்டு அதிகரித்துள்ளதாக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. கடந்த 2 மாதங்களாக அரிசி திருட்டு ரேஷன் கடைகளில் உச்சம் அடைந்துள்ளன. முக்கியமாக தமிழ்நாட்டில் இருந்து ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கேரளாவிற்கு அரிசி கடத்தும் பணிகள் அதிகம் நடந்து வருகின்றன. அங்கே அதிக விலைக்கு இந்த அரிசிகள் விற்கப்படுகிறது.

சமீபத்தில் குற்றச்செயலில் ஈடுபட்ட 619 வாகனங்களும் நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டம் 1980-ன்கீழ் 1 நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது, என்று கூறப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+